சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல ஹிமி தேரர் விளக்கம் -
03 Jun,2019
சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும் உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவ
சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணை இல்லத்தில் சைவசமயம் தொடர்பாகவும், தலைமைத்துவம் தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகில் காணப்படும் சமயங்கள் அனைத்தும் இந்தியாவிலே ஆரம்பிக்கப்பட்டன.
புத்த பெருமானின் பிறப்பு சைவ சமயமாகும். முதலாவதாக அவர் வழங்கிய போதனை இந்தியாவிலே வாழ்ந்த சைவர்களுக்காக வழங்கப்பட்ட போதனையாகும்.
அந்தக் காலத்தில் உலகத்தில் பௌத்த மதம் தோற்றம் பெற்றிருக்கவில்லை. சிவனுக்கு பூஜை செய்த 5 பேர் புத்த பெருமானிடம் போதனை பெற்ற பின்னர்தான் அவர்கள் துறவறம் சென்றுள்ளார்கள். எனவே சைவ சமயமும் பௌத்த சமயமும் சகோதரர்கள் போன்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகப் பகுதிகளில் கோயில்கள் அகற்றப்பட்டு, பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.