முள்ளிவாய்க்காலில் முதலாவதாக சுடர் ஏற்றிய சிறுமி யார் தெரியுமா?
19 May,2019
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமி ராகினி பொது ஈகைச்சுடரை முதன்முதலாக ஏற்றிவைத்திருந்தார்.
இறுதிப் போர் நடந்தபோது கோரத் தாக்குதலில் சிறுமி ராகினி தனது கையொன்றைப் பறிகொடுத்திருந்தார்.
அதைவிடப் இறந்த தனது தாயிடம், அப்போது பிறந்து எட்டு மாதங்களே ஆகியிருந்த ராகினி பால் குடித்த காட்சி அனைவரினதும் நெஞ்சையும் கனக்கச் செய்தது.
தாயின் உயிர் பிரிந்தது அறியாமல், தந்தை படுகாயங்களுக்கு இலக்காகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியாமல் அந்த எட்டு மாத பச்சிளம் குழந்தை தாயிடம் பால் குடித்த காட்சி அனைவரினதும் நெஞ்சையும் அன்று கனக்கச் செய்து விட்டது.