கடற்புலிகளின் தளம் அமைந்திருந்த காணியையும் வளைத்துப் போட்டார் ஹிஸ்புல்லா!
16 May,2019
கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வெருகல் பிரதேசத்தின் இராமர் தீவு என்னும் இடத்தில் இருந்த கடற்புலிகளின் காணியே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரினால் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஸ்ரீநேசன் கோரியுள்ளார்.
“தற்போது எமது வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல அரசியல்வாதிகள் அளவுக்கதிகமாக காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். தற்போது கிழக்கு ஆளுநராக இருக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் ஒரு நிறுவனத்தின் பெயரில் மன்னார் மாவட்டத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கொள்வனவு செய்திருப்பதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெருகல் பிரதேசத்தில் இராமர் தீவு எனும் இடத்தில் கடற்புலிகளின் தளமாக இருந்த காணி கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகின்றது. அதேபோன்று திருகோணமலையில் சல்லித்தீவு பிரதேசம் மற்றும் பதுளை வீதியில் புல்லுமலை பிரதேசம் ஆகிய இடங்களில் கணிசமான காணிகள் உள்ளதாகக் கருத்துக்கள் நிலவுகின்றன. இவைகளைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது.
சாதாரண முஸ்லிம் மக்கள் இவ்வாறு காணிகளை சிறிது சிறிதாக கொள்வனவு செய்து அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்துவது பரவாயில்லை. ஆனால் இவ்வாறு அளவுக்கதிகமாக அரசியல்வாதி ஒருவர் கொள்வனவு செய்து வைத்திருப்பதென்பது எதிர்காலத்தில் என்ன நோக்கத்திற்கானது என்ற கேள்வியும் எழுகின்றது.
எனவே, சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் குறிப்பிட்ட அரசியல்வாதியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்ற குறித்தும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்
றிசாட்டை பாதுகாக்கும் அரச-கூட்டமைப்பு!
ISIS தீவிரவாதிகளுக்கும் முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் ஆளுனர்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் இவ் நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு(தமிழரசுக்கட்சி,ரெலோ,புளெட்)றிசாட் பதியுதீனையும் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா மற்றும் மேல்மாகாண ஆளுனர் அசாத்சாலியையும் பாதுகாத்து வருகின்றனர். இவ்விடயத்தை கூட்டமைப்பு மறுக்குமாக இருந்தால் கூட்டமைப்பின் பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்ககையில்லா பிரேரணையை கொண்டுவர முடியுமா? அவ்வாறு கொண்டுவரப்படும் பட்சத்தில் வடக்கு,கிழக்கு,மலையக மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு றிசாட் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
ஆனால் இவற்றை செய்யாமல் அடுத்துவரும் ஜனாதிபதி,பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு,சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும்; கூட்டாக இணைந்து ஆட்சி அமைப்பதுதான் இவர்களது பிரதானமான நோக்கமாக காணப்படுகிறது இதற்கு நலலொரு உதாரணம் சிறிதரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் முஸ்லீம் அமைச்சர்கள் மீதும் முஸ்லீம் கட்சிகள் மீதும் வீணான பழிகளை சுமத்த வேண்டாம் எனக் கூறியிருந்தார். இதனுடைய உள்நோக்கம் இவ் நான்கு கட்சிகளுக்குமிடையிலான ஒற்றுமை குலைந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றனர என்பது தெளிவகின்றது.
மேலும் ஆளும் அரசாங்கத்தின் மிக முக்கிய பங்காளிகளாக காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கமுடியும்.உங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவிட்டால் அரசுக்கு வழங்கும் ஆதவை விலக்கி கொள்ளப்போகின்றோம் என ஊடகங்களில் விளம்பரம் தேடாமல் நிஜமாக செய்து காட்ட முடியுமா?
கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசுவது இவர்களது இரட்டை வேடத்தை மிக துல்லியமாக காட்டுகின்றது.இவ்வாறான நிலைப்பாடு ஜஸ்ஜஸ் தீவிரவாதிகளையும் அவர்களுக்கு துணைபோன அரசியல்வாதிகளையும் காப்பாற்றி கூட்டமைப்பின் எதிர்கால தேர்தல் அரசியலை முன்னிறுத்தி றிசாட் பதியுதீன்,ஹிஸ்புல்லா அசாத்சாலி இவர்களை 2020ல் ரணில் அரசாங்கத்தோடு கூட்டுசேர்த்து அமைச்சுப்பதவிகளையும் சலுகைகைளையும் பெற்றுக்கொள்வதுதான் இவர்களது உன்மையான உள்நோக்கமாகும். இதை மறுப்பவர்கள் றிசாட்டுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரமுடியுமா?