இறந்த பிணத்தில் இருந்து மோதிரத்தை களற்றிய தமிழன் – இதை விட கேவலம் என்ன ?
                  
                     15 May,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	இந்த உண்மை கதையை சற்று வாசியுங்கள், சிங்களவன் , முஸ்லீம் என்று நீங்கள் முதலில் பேசும் போது.. இங்கே தமிழர்கள் நடந்து கொண்ட விதத்தை ஒரு முறை பதிவு செய்ய நான் விரும்புகிறேன்ஸ
	அவரின் மகள் சொன்னார்ஸ.
	Aunty, காலை 8 மணிக்கு நானும் தங்கச்சியும் அப்பாவுடன் தேவாலயத்தினுள் நுழைந்தோம். (ஈஸ்டர் பெருநாள் ஆனதால் அம்மா வீட்டில் சமைப்பதாக நின்று கொண்டார். நானும் தங்கையும் அப்பாவுடன் அந்தோணியார் கோவிலுக்குச் சென்றோம்.) சரியாக 8.45 மணியள்வில் ,இனி வீட்டுக்குப் போகலாமே என நினைத்து அங்கு சுவரில் இருந்த மணிக் கூட்டை பார்க்கவும், என்னவென்றே புரியாத காதைப் பிளக்கும் சத்தமும் கேட்கவும் சரியாக இருந்து. கண் இமைக்கும் நேரத் தில் அந்த இடம் சுடுகாடாகியது. முன் பின் அக்கம் பக்கம் ஓரிருவருடன் உயிரற்ற உடல்களே சிதறிக் கிடந்தன. எனக்கும் தங்கைக்கும் இடையில் அப்பா சரிந்து விழுந்து கிடந்தார்
	நானும் தங்கையும் கதறி அழுத படி அப்பாவைத் தூக்க முயன்றோம்.
	.
	அப்போதுதான் ஆள் ஆளுக்கு உள்ளே வந்து கொண்டிருந் தார்கள். நானும் தங்கையும் அங்கு வந்தவர்களை கெஞ்சினோம் அப்பாவை தூக்கி வெளியே கொண்டு வர உதவும் படி . யாரும் சட்டை செய்யவில்லை. அவர்கள் அங்கு இறந்து கிடந்த உடல்களை படம் எடுப்பதிலும், வீடியோ எடுப்பதிலும் மும்மரமாக இருந்தனர்.ஆவேசம் வந்த தங்கை படம் எடுத்த ஒருவரின் கைபேசியைப் பறித்து எறிந்தாள். அதற்கு இருவர் சண்டைக்கு வந்தனர்.அவ்வேளை உள்ளே ஒரு பாதிரியார் ஓடி வந்தார். எமக்கு உயிர் வந்தமாதிரி இருந்தது. நான் ஓடிச்சென்று ” ஐயோ பாதர் அப்பாவை தூக்க ஒருக்கா உதவி செய்யுங்கள் என்று அழுதேன். அவர் என்னைப் பார்த்துவிட்டு நேரே சென்று மாதாவின் சுருவம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடினார்.
	யாருமே உதவுகிரார்கள் இல்லையே என்று பைத்தியமாக மனம் அரற்றியது. அப்போது சிவந்த நிறமுடைய ஒருவர், அருகில் இருந்த பொன்னம்பல வாணேஸ்வரர் கோவிலுக்கு வந்தவராக இருக்க வேண்டும், நெற்றியில் விபூதி இருந்ததுஸ.. உள்ளே வந்தார். அவரை நோக்கி ஓடினோம். அவர் நான் வருகிறேன் என்று கூறிய படி வந்து எம்முடன் சேர்ந்து அப்பாவைத் தூக்கி ஆலயத்தின் வெளியே கொண்டு வந்தார். தங்கை அப்பாவுடன் நிற்க, நான் ஓடிச் சென்று தெருவில் சென்ற ஓட்டோக்களை மறித்தேன். அதிலும் எமக்குத் தோல்விதான். யாரும் நிற்பாட்டவில்லை. இதற்கிடையில் ஆலயத்தின் உண்டியல் பிளந்து கிடந்தது.இன்னொரு சாரார் அதை அள்ளிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
	இறுதியின் சிவன் கோவில் அருகில் இருந்த காளி கோவில் ஒரு ஓட்டோ நிற்பதைக் கண்டு, அங்கு ஓடிச் சென்று, அந்த ஓட்டோ அண்ணரிடம் , ” நீங்கள் வந்தே தீரவேண்டும் அல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்து வலுக் கட்டாயமாக அவரை இழுத்து ஆலயம் அருகில் அழைத்துச் சென்றேன்.அப்போது நான் அழுதழுது ஓட்டோ அண்ணருடன் கதைத்ததை பார்த்த ஒருவர் தானும் ஓட்டோவில் ஏறிக் கொண்டார் எனக்கு உதவுவதாக. நான் நன்றி உணர்வுடன் அவருடன் சென்று, அப்பாவைத் தூக்கி ஓட்டோவில் ஏற்றியதும், புதிதாக ஏறியவர் தான் அப்பாவை வைத்தியசாலையில் சேர்ப்பதாயும் எம்மை வீட்டுக்குச் சென்று அம்மாவுக்கு அறிவிக்கும் படியும் சொன்னார்.
	அதன் படி அந்த நபரும் ஓட்டோ அண்ணருமாக அப்பாவை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.நானும் தங்கையும் ஆலயத்தை கடந்து, தெருவின் மறுமுனையில் இருந்த கடைகளின் முன் இரத்தக் கறைகளுடன் நின்று அம்மாவுக்கும் மாமாவுக்கும் போன் பண்ணிவிட்டு அழுதபடி காத்திருந்தோம். அப்போது அந்தக் கடைக்காரர்கள் எம்மை தமது கடை முன் நிற்க வேண்டாம் என்று கலைத்தனர். அப்போது அம்புலன்ஸ் அங்கும் இங்கும் ஒடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மாமா வந்து அவருடன் புறப் பட்டோம். அம்மா ஆஸ்பத்திரிக்குச் சென்று அப்பாவின் உயிரற்ற உடலைப் பார்த்தபோதுதான் தெரிந்ததுஸ.. அப்பா அணிந்திருந்த கழுத்துச் சங்கிலி, இரண்டு மோதிரம் ,பணப்பை,கைபேசி இவ்வளவும் களவு போய் விட்டதென்றுஸஸஸ..
	கைடைசியில் அப்பா நினைவுக்கு அவரது பொருட்கள் கூட இல்லையே என்ற கவலையுடன் நானும் தங்கையும் காவல் துறையில் ஒரு entry போட்டோம்.எமக்கு உதவுவதாக எம்முடன் ஓட்டோவில் ஏறிய நபர்தான் அவற்றை திருடியிருக்க வேண்டும் என்று புரிந்தது. பொலிசார் அப்பாவை ஏற்றிச் சென்ற ஓட்டோ ஓட்டுனரைப் பிடித்து விசாரித்ததில், கூட வந்தவன் ஆஸ்பத்திரி போகும் வழியில் ஓரிடத்தில் இறங்கி விட்டதாக சொன்னார்.