தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?! அறிக்கை வெளியிட்டுள்ளது ஐ.நா
14 May,2019
ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து இன மற்றும் மத குழுக்களின் நலனுக்காகவும் எதிர்த்தரப்பு, சிவில் சமுதாயம் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவை இணைந்து சரியான நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்புடன் செயற்பட்டு உடனடியாக இந்த தாக்குதல்களை நிறுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்காவிற்கான ஐ.நா. சபையின் கூட்டு அறிக்கையில், ஐ.நா விசேட ஆலோசகர்கள் கரேன் மற்றும் ஸ்மித் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் நடக்கும் தாக்குதல்களானது இனவாத யுத்த மோதலின் பேரில் ஒரு அதிர்ச்சிகரமான காலகட்டத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முற்படுகிறது, இந்த தாக்குதல்கள் ஸ்ரீலங்காவை பின்னோக்கி தள்ளி வருகின்றன. இதனை சரியான முறையில் கையாளவில்லையெனில் சமீபத்திய வன்முறை இன்னும் அதிகரிக்க சாத்தியம் உள்ளது, "என அவர்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள வீடுகளுக்கும், வணக்கதஸ்தலங்களுக்கும் வியாபாரஸ்தலங்களுக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அவர்கள் முன்னரே எச்சரிக்கை செய்ததாக வன்முறை தீவிரவாதம் மற்றும் வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிரான அவர்களது அண்மைய அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்றுவரும் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவ சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்களில் பௌத்தர்கள் பெரும்பான்மை வகிப்பதையும் சிறப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"இலங்கையில் இடம்பெற்றுவரும் அண்மைக்கால வன்முறைகள் ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்கள் அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளது. குறித்தவிடயம் சிறுபான்மை மதத்தினரை ஆபத்தில் தள்ளியுள்ளது," என்று அவர்கள் கூறினர்.
மேலும் தங்களது மக்கள்தொகையில் உள்ள இன மத குழுக்களுக்கு இடையில் வெறுப்புணர்வு ஏற்படாத வகையில் அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
மத பாரபட்சம் மற்றும் வன்முறையை முன்நிறுத்தும் உள்ளூரின் பாரபட்சமான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் சுமூகமான தீர்வை எட்டமுடியும் எனவும் அரசாங்கத்திற்கு இடையேயான விசுவாசம் மற்றும் மத நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.
இலங்கையில் ஒரு பன்முக சமுதாயம் உள்ளது. நாட்டின் அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன்படி ஒரு இலங்கையர் ஒரு பெளத்தராகவோ இந்துவாகவோ ஒரு முஸ்லீமாகவோ ஒரு கிறிஸ்தவராகவோ இருக்க உரிமையுண்டு. இலங்கையின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் தக்க வைத்துக்கொள்வதன் மூலம் இந்த சமூகங்கள் அனைத்தும் அவர்களின் மதங்களை அடையாளப்படுத்த உரிமையுண்டு. எனவே ஒருவரையொருவர் மதிக்க வேண்டுமென அனைத்து இலங்கையர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என்று விசேட ஆலோசகர்கள் தங்கள் அறிக்கையில் இறுதியாக குறிப்பிட்டுள்ளனர் "