முஸ்லிம்களின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம்":
                  
                     13 May,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	
	 
	தமிழ் சிங்கள இனங்களை அழித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
	மேலும், இலங்கை நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களில் இன்று மிகவும் கூடுதலான வகையில் பாதிக்கப்பட்டு வருவது தமிழ் மக்களே!.  தமிழ் மக்கள் அன்றிலிருந்து  இன்று வரையும் இந் நாட்டின் அடிமைகள் என்னும் சொற்பதத்தினுள் திணிக்கப்பட்டுவிட்டார்கள்.
	
	அத்தோடு, கடந்த 30வருடகாலமாக விடுதலைப் புலிகளின் யுத்தத்தின் போது அரசபடையால் மிகவும் கொடூரமான முறையில் எமது தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். இதனை இந்த அரசாங்கமும், ஏனைய நாடுகளும் அறிந்த விடயமாமே. மேலும், இறுதிப்போரான முள்ளிவாய்க்காலில் ஓரு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களின் உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு பலர் இன்றும் அங்கவீனர்களாகவும் தமது உறவுகளை இழந்தும் காணாமற் போனோர் பற்றித்தெரியாமல்  காத்திருக்கின்றார்கள் என்றால் இதற்கு யார் பொறுப்பானவர்? இன்றைய அரசாங்கமே பொறுப்பானவர்கள்.
	உயிர்த்த ஞாயிறு தினமான 21.04.2019 அன்று ஐ.எஸ் தீவிரவாதிகளால் தேவாலயங்களில் நடாத்தப்பட்ட திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலில் எமது தமிழ் மக்களுக்களில், எத்தனை உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. அதில் 300ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இன்று வரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
	இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக இந்தியப் உளவுத்துறையினரால், ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தும், அவர் அலட்சியப் போக்காக இருந்திருக்கின்றார் இது பற்றி எதுவிதமானதேடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலும்,  இந்தத் தற்கொலைத் தாக்குதலிற்கான  முழுக்காரணமும் இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையுமே சார்ந்தது.
	அத்தோடு, தற்போது கிழக்கு மாகாண ஆளுனராக இருக்கின்ற ஹிஜ்புல்லாவின் தலைமையில் காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆயுததாரிகள் புர்கா அணிந்துக்கொண்டு, தங்களை இனங்காட்டிக் கொள்ளாதவாறு உலாவித்திரிவதாகவும் நாம் அறிந்த தகவலைச் சுட்டிக்காட்டியிருந்தோம் ஏனெனில் ஹிஸ்புல்லா கடந்த வருடம் பாராளுமன்றில் இவ்வாறு கூறியிருந்தார். அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணையுமானால், எமது முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் இலங்கையில் இரத்த ஆறு ஓடும் எனக் கூறினார். ஹிஸ்புல்லா அன்று கூறியதற்கும் இன்று நடந்ததிற்கும் என்ன வித்தியாசம் அது மட்டுமாஸ.? மட்டக்களப்பு மாவட்டத்தில் புனானைப் பிரதேசத்தில் பல மில்லியன் ரூபா செலவில் அரபுக்கல்லூரி கட்டப்படுகின்றது.
	இந் நாட்டில் இரு மொழிகளே பேசப்படுகின்றன. இந்த வகையில் அரபுமொழியின் அவசியம்தான் என்ன? ஆனால் வெளிநாடுகளில் உள்ள ஜ.எஸ் தீவிரவாதிகளை அழைத்து அவர்களை மாணவர்கள்  என்ற பார்வையில் வழிநடாத்தி, இங்குள்ள முஸ்லீம் இளைஞர்களுக்கு அவர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு அவர்களைத் தீவிரவாதிகளாக்கி இந்நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதே ஹிஸ்புல்லாவின் நோக்கமாகும்.
	இதைத்தான் த.வி.பு.கட்சியாகிய நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். இதற்காகத்தான் என்னை இலங்கை புலனாய்வுப்பிரிவினர் அழைத்து விசாரணை செய்தார்கள். அத்தோடு இந் நாட்டின் வாழ்கின்ற மூவின மக்களில், முஸ்லீம் அரசியல் வாதிகளின் தலைமைத்துவம் மேலோங்கப்படவேண்டும் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களைக் குறைத்து தங்களின் ஆதிக்கத்தை ஐ.எஸ் தீவரவாதிகளின் ஒத்துழைப்புடன்நிலைநாட்டுவதே இவர்களின் நோக்கமாகத் தெரிகின்றது.
	நல்லிணக்கத்தை விரும்பும் மக்களது பார்வையில் இப்படியான சூழ்நிலையை உருவாக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு யார் ஆதரவு வழங்குகின்றனர். எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே, மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதி இன்று நாட்டினதும், ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான  றிசாட் பதியுதீன் இவருக்கும் தற்கொலைத்தாரிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்பது தற்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கின்றபோது புலனாகின்றது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.