மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ்
11 May,2019
பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம்.
இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி.
உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா.
ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது.
சவுதி அரேபியாவில் இருந்து வந்த பெரும் நிதியுடன், அரசு சார்பில்லாத தனியார் நிறுவனம் ஒன்று ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது குறித்த கரிசனைகள் கல்வியாளர்கள் மத்தியில் உண்டாகி உள்ளது.
இத்தகைய தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பேராசிரியர் சாண ஜெயசுமண, சட்ட பீடத்தின் கீழ் சட்டம் படிப்பதாக அனுமதியை வாங்கி, அதன் கீழ், ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது தான் திட்டம் என்கிறார். இது குறித்து முழு விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்கிறார்.
Batticaloa Campus (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஹிஸ்புல்லா. அவர் கிழக்கு கவர்னர் ஆனதும், தனது மகனை தலைவர் ஆக்கி உள்ளார்.
ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் படிப்பிக்கப் படும் என்பது பச்சை பொய் என மறுக்கிறார் ஹிஸ்புல்லா. உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றி எவ்வாறு அதை செய்ய முடியும் என்கிறார் அவர்.
உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கின்றது.
முன்னாள் உயர் கலவி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, தனது காலத்தில் அவ்வாறான அனுமதி இன்னும் வழங்கப் படவில்லை என்கிறார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் மாயாதுன்னா, IT சிஸ்டம் குறித்த மதிப்பீடுகளுக்கே விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார்.
ஆயினும், குறித்த பல்கலைக்கழகம் ஏப்ரல் 30ம் திகதி, Information Technology, Management, Agriculture and Education ஆகிய துறைகளில் கற்க்கை நெறிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் முகாமையாளர் முகம்மது தாஹிர், இன்னும் ஒருவருட காலத்தில் சகல கட்டுமான வேலைகளையும் முடிந்து விடும் என்கிறார்.
தாஹிர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல்கலைக்கழகத்துக்கு வந்து பரிசீலனை செய்து சென்றதாக சொல்கிறார்.
ஆயினும் இதனை மறுக்கிறார் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி செயலாளர் விஜேசிங்க. நாம் நாட்டின் அரச பல்கலைக்கழகங்களையே ஒழுங்கு படுத்துகிறோம். இது தனியார் நிறுவனம். ஆகவே இது உயர்கல்வி அமைச்சின் கீழே வரும் என்கிறார் அவர்.
நிறுவனத்தின் முன்பகுதி, மொகலாய, மேற்கு ஆசிய (சவூதி) கட்டிட கலைகளை பிரதிபலிப்பதாக பிரமாண்டமாக உள்ளது. வகுப்பறைகள் மிக நவீன வசதிகள் கொண்டதாக உள்ளன. இந்த காணி உள்ள நிலம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. இங்கே நீச்சல் தடாகமும், கால்பந்து மைதானமும், பல நவீன விளையாட்டு வசதிகளும் கொண்டதாக இருக்கும் என நிறுவனத்தின் youtube பதிவு சொல்கிறது.
இதற்க்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி ஹிஸ்புல்லாவிடம் முன்வைக்கப் பட்டது.
சவீதியில் உள்ள ‘Ali Al-Juffali Trust’ இடம் இருந்து 24 மில்லியன் டாலர் கடன் பெறப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கின் ஊடாக வந்தது என்கிறார் அவர்.
மலேசியாவில் உள்ள Universiti Teknologi Petronas (UTP) என்கிற தனியார் பல்கலைக்கழகத்தின் மாதிரியை கொண்டே இந்த பல்கலைக்கழகத்தினை அமைகின்றார் அவர். இதற்காக 2016 -17 காலப்பகுதியில் அங்கே சென்று இருக்கிறார் ஹிஸ்புல்லா.
சோலார் ஓடுகளுடன் கூடிய கூரைகளுடன் கட்ட பட்டுக்கொண்டிருந்த இந்த பல்கலைக்கழகத்தின் லைப்ரரி வேலைகள், கடந்த வார குண்டு வெடிப்புகளுக்கு பின் நிறுத்தப் பட்டுள்ளன.