பல்கலைக்கழக உணவகத்தில் தியாகி திலீபன் படம் உரிமையாளர் கைது
                  
                     08 May,2019
                  
                  
                     
					  
                     
						
	
	இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயா அதே தியாகியின் படத்திற்கு மாலையிட்டு மரியாதை வணக்கம் செலுத்தினாரே அப்போது எங்கே போயிருந்தீர்கள் பொலிசாரே? கைகட்டி வாய்பொத்தி அவருக்கு பாதுகாப்புக்குத்தானே நின்றீர்கள்? உங்கள் வன்மத்தை தீர்க்க அப்பாவிகள்தானா கிடைத்தார்கள்? 
	தியாகி திலீபன் எங்கள் வணக்கத்திற்குறியவர் அவர் இலங்கை அரசுக்கு எதிராக போரிட்டு மடிந்தவர் இல்லை இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து அகிம்சையை போதித்து உயிர் நீர்த்தவர். உங்கள் நாட்டின் இறையாண்மையை காப்பாற்றவும்தான் அவர் உயிர் ஈகம் செய்தார்.
	தமிழர்கள் மாத்திரம் அல்ல இனம் மொழி கடந்த அத்தனை இலங்கையர்களும் வணங்கவேண்டிய ஈகச்சுடர் திலீபன்...