நிலைமையை சாதகமாக பயன்படுத்தி வட,கிழக்கில் இராணுவத்தை குவிக்க முயற்சி – மாவை
                  
                     04 May,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	
	 
	
	ஐ.எஸ். பயங்கரவாதத்தை சாதகமாக பயன்படுத்தி  வடக்கு கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இராணுவத்தை குவிப்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது. உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
	இந்த நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.
	தற்போதுள்ள அச்சுறுத்தலான சூழலை பயன்படுத்தி மீண்டும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.