ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது! தீவிரவாதத்தை உருவாக்க பல்கலைக்கழகம்

03 May,2019
 

 


 
கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம்.ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு அதிகாரியான மொஹமட் மர்சுக் மொஹமட் ரஸ்லி என்பவர், மோதரைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரச அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகளை வைத்திருந்தமையால் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோதரையிலுள்ள அவரது வீட்டில் 5 இறப்பர் முத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
சமகால ஆளுநர் ஹிஸ்புல்லா இராஜாங்க அமைச்சராகச் செயற்பட்ட காலப்பகுதியில் பயன்படுத்திய இறப்பர் முத்திரைகளும் அதில் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முஸ்லீம் அடிப்படை தீவிரவாதத்தை உருவாக்கவா மட்டக்களப்பில் இவ்வளவு பெரிய ஹிஸ்புல்லா பல்கலைக்கழகம்?!
 
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்கு ஆரம்பிக்கப்பட உள்ள பாடநெறிகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளது.
Batticaloa Campus எனும் பெயரில் மட்டக்களப்பு புனானையில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புனானை பகுதியில் வெலிகந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள Batticaloa Campus இன் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில், அப்போதைய தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை ஹிரா மன்றமும் தனியார் பங்களிப்புடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த பின்புலத்தில் 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3 ஆம் திகதி இந்த நிறுவனத்தை பல்கலைக்கழகமாக பதிவு செய்யுமாறு Batticaloa Campus நிர்வாகம் உயர் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
எனினும், இதுவரை அதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது உயர் கல்வி அமைச்சின் அனுமதி வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இங்கே கற்பிக்கப்படவுள்ள பாடநெறிகள் என்ன? என்ற சர்ச்சை நாட்டில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து பூதாகரமாக வெடித்துள்ளது.
இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் அனைவரும் மத தீவிரவாத கொள்கையுடைய கல்வியை இலங்கையில் உள்ள மதரசாக்கள் ஊடாக பயின்று அதன் ஊடாக தற்கொலை தாக்குதல் நடத்த தூண்டப்பட்டுள்ளார்கள்.
இதன் பிரகாரம் இலங்கையில் உள்ள மதரசாக்கள் முதல் கொண்டு பள்ளிவாசல்கள் வரை சோதணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்நிலையில் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் உள்ள கல்லூரி இஸ்லாமிய மதஅடிப்படைவாத கல்வியை சர்வதேச அளவில் போதிப்பதற்காக அமைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் குறித்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், தகவல் தொடர்பாடல், உள்ளிட்ட மூன்று கற்கை நெறிகள் மாத்திரமே கற்பிக்கப்படவுள்ளது. என்று கூறியுள்ளார்.
ஆனால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக ஆறு பாடநெறிகள் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சமய கலாசார பீடம் மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த பீடங்களுக்கு அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மிக முக்கியமாக சிரியா தொடர்பான இஸ்லாமிய சமய கற்கைநெறி தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு சவுதி அரேபியாவில் உள்ள முகமட் அலி என்பவர் வட்டி இல்லா கடனாக பல மில்லியன் ரூபாய்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்வாகத்தின் வைப்பில் உள்ள பணத்துடன் சேர்த்து 3600 மில்லியன் ரூபாய் பணம் குறித்த பல்கலைக்கழகதிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த பல்கலைக்கழகதின் இணையத்தளத்தில் பல இஸ்லாமிய பல்கலைக்கழகங்களின் பெயர்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த வருடம் எம்.எச்.எம்.இப்றாஹிம் அவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அனுமதியையும் அதற்காக 200ஏக்கர் காணியையும் வழங்கியது முன்னால் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே!
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்ன என்ற கிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பெற்று வருகின்ற.( Batticaloa Campus – Sri Lanka) என்ற அரச சார்பற்ற பல்கலைக்கழகமாகும். இப்படியானதொரு பல்கலைக்கழகத்தை அமைக்கவேண்டும் என்று என்னம் கொண்ட, தற்போதய இராஜாங்க அமைச்சர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அன்றய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது சந்தோசமான முறையில் அதற்கு அனுமதி வழங்கியதுடன், அதனை அமைப்பதற்கான 200ஏக்கர் காணியையும் வழங்கியிருந்தார்.
அதன் பிற்பாடு சவூதி அரசாங்கத்தினூடாக பல கோடிகள் முதலீட்டில் இப் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் நாம் அறிவோம்.
இந்த பல்கலைகழத்தினூடாக 3000 மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் பிரயோசனமடைய இருக்கின்றார்கள். இதோடு விவசாய வர்த்தக பீடம் விவசாய பட்டத்தினையும், இஸ்லாமிய ஷரீயா கற்கைகளுக்குமான பட்டங்களையும், கட்டிட வடிவமைப்புக்கான பட்டங்களையும், மிக முக்கியமான சகல வசதிகளும் கொண்ட உலகத் தரம் வாய்ந்த ஒரு மருத்துவ பீடமொன்றையும் உருவாக்குவதற்கான சகல வேலைப்பாடுகளும் நடந்து வருகின்றன.
அதே நேரம் மேற்படிப்புக்களை மேற்கொள்வதற்கு மலேசியாவில் உள்ள 06 பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சீனா, தாய்லாந்து, சூடான் நாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இந்த பல்கலைக்கழகத்தினூடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும் பொறியியலாளர்களும்,கணக்காளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், முஸ்லிம் மாணவர்கள் உருவாகவுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதே சத்தியமானதாகும். இத்தனைக்கும் காரணமான ஹிஸ்புல்லா அவர்களை இந்தப் பணிக்காக யாரும் பாராட்டாமலும் இருக்கமுடியாது.
இந்த நிலையில் இப்படியான திட்டத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அதற்கான காணியையும் வழங்கிவைத்த முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும் யாரும் இலேசாக மறந்துவிடவும் முடியாது.
இப்படியானதொரு பல்கலைக்கழத்துக்கான அனுமதியை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பதை மறந்துவிடவும் முடியாது.சவூதி அரசாங்கத்தோடு மஹிந்த அரசாங்கம் இருந்த உறவின் காரணமாகவே இந்தத் திட்டத்திற்கு பலகோடிகளை செலவு செய்வதற்கு சவூதி அரசாங்கம் முன்வந்தது என்றால் அதுவும் மிகையாகாது.
ஆகவே முஸ்லிம் மக்களுக்கு பெரும் ஒரு பொக்கிசமாக கருதப்படும் இந்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு முழு மூச்சாக செயல்படும் ஹிஸ்புல்லா அவர்களையும், இதற்கான அனுமதியை வழங்கிய முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும், இந்த திட்டத்துக்காக பலகோடிகளை ஒதுக்கி தந்த சவூதி அரசாங்கத்தையும் முஸ்லிம்கள் காலாகாலமாக பாராட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது என்பதே உண்மையாகும்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies