வெள்ளவத்தையில் சிங்கள ஆமியே வைத்த குண்டு:
24 Apr,2019
வெள்ளவத்தை சவோய் தியேட்டருக்கு அருகாமையில் குண்டு ஒன்று வெடித்தது என்ற செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. இதனை முஸ்லீம் ஜிகாடிகளும் வைக்கவில்லை. சிங்கள ஆமியே வைத்துள்ளது. காரணம் என்னவென்றால் வெள்ளவத்தையில் வீதியின் ஓரமாக ஒரு மோட்டர் சைக்கிள் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு பெரிய பை காணப்பட்டது.
இது குண்டாக இருக்கலாம் என்று கருதிய படையினர், சிறிய குண்டு ஒன்றை கொண்டு அந்த மோட்டர் சைக்கிளை தகர்த்துள்ளார்கள். ஆனால் அதில் எந்தக் குண்டும் இருக்கவில்லை. இறுதியாக மோட்டார் சைக்கிள் நாசமானது தான் மிச்சம். குண்டை செயல் இழக்க செய்ய குண்டையே போடுகிறார்கள் என்று மக்கள் சற்று முன்னர் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.