இலங்கையில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், கொழும்பு நகரின் 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர ஓட்டல்களிலும் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
நேற்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள். இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. வேனில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இதனை முன்னிட்டு அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது.
கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது வெடித்துள்ளது. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு நகரில் 9வது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
தொடர்ந்து பல இடங்களில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளனவா? என சோதனை நடைபெறுகிறது. சந்தேகத்திற்கு உரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு : போலீஸ் விசாரணை தீவிரம்
இலங்கையில் கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
கொழும்புவில் நேற்று தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்பு படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சோதனை மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதுவரையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டு இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்ய பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் நிலையை பதற்றம் அடைய செய்துள்ளது. டெட்டனேட்டர்கள் சிக்கியது தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்த பயங்கர சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவசரநிலை பிரகடனம்
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவசர நிலையும் அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய அமைப்பு
இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், குண்டு வெடிப்பை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நெட்வோர்க் உதவியின்றி இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய அமைப்பு என அந்நாட்டு அமைச்சர் தகவல்
இலங்கையில் முக்கியமான தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடக்க உள்ளதாக இலங்கை காவல்துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரா 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 11–ந் தேதி, உளவுத்துறை எச்சரிக்கையை அவர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதில் ‘‘தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, முக்கியமான தேவாலயங்களையும், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தையும் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த உள்ளதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு நடந்த புத்தர் சிலைகள் உடைப்பு மூலம் பலருக்கும் தெரிய வந்த இயக்கம் ஆகும்.
தாக்குதல் தொடர்பாக 3 உளவுத்துறை உள்ளீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது, ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தோல்வி காரணமாக இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய அமைப்பு என அந்நாட்டு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "3 குண்டு வெடிப்பை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு நெட்வோர்க் உதவியின்றி இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.