ஜெனிவா முன்றிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யுத்த நிழல்படங்கள்
01 Mar,2019
ஈழத்தமிழர்களுக்கு கடந்த 71ஆண்டுகளாக மாறிமாறிவந்த அரசாங்கங்களால் இழைக்கப்பட்ட அநீதிகள் இனப்படுகொலை அடையாள அழிப்பு என்பன உலகின் கண்களுக்கு தெரியும்படியும் உலகின் பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கு புரியும்படியும் ஜெனிவா முன்றலில் தமிழினப்படுகொலை சாட்சியங்களாக நிழல்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஏழாவது ஆண்டாகவும் தமிழினத்துக்கான கடமையாக மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் இப்பணியை செய்துவருகின்றார்.
இம்முறை ஜெனிவாக் கூட்டத்தொடர் ஆரம்பித்து மூன்றாவது நாளாக இன்றும் முன்றலில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி சாட்சியப்புகைப்படங்கள் ஆதாரமாக அணிவகுத்து நிற்கின்றன.
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இனஅழிப்புக்கான காரணங்களையும் காரணகர்த்தாக்களையும் அறியும் பொருட்டு தமிழ் பிரெஞ் டொச் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விளக்கங்களும் குறிப்புக்களும் எழுதப்பட்டுள்ளதுடன் பிரத்தியேக துண்டுப்பிரசுரங்களும் இவ்மொழிகளில் வழங்கப்படுகின்றன.மிக உயர்ந்த மனிதாபிமான பணியொன்று ஜெனிவா முன்றலில் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.