மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ
17 Feb,2019
மன்னார் புதைகுழியின் காபன் பரிசோதனை ஆய்வு அறிக்கை கிடைத்ததுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
மன்னார் சதொச மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த அறிக்கை இம் மாதம் 20 ஆம் திகதி மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என்று சட்ட வைத்தியர் நிபுணர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மனித எச்சங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி, மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கையளிக்கப்பட்டன.
மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான காபன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான குழந்தை ஒன்றின் மனித எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 307இற்கும் மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.