யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் செயற்றிட்டம் ஆரம்பம்

08 Jan,2019
 


இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
இதற்கு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கை முக்கியமானதெனக் குறிப்பிட்டுள்ள அவர், இறந்தவர்களை நினைவுக்கூர இது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பின்னரும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவென்பது எவருக்கும் தெரியாது என்றும் இதற்கான கணக்கெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் இறுதி எண்ணிக்கையை கணிப்பிடுவதற்கு, புள்ளிவிபர அணுகுமுறையை  பயன்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009 மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சரணடைந்த பின்னர், காணாமல்போனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இம்முறை பயன்படுத்தப்பட்டதென இரு சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்களில், கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை உறுதிசெய்வதற்காக, அவர்களது குடும்பத்தவர்கள், உறவினர்கள், அயலவர்களுடன் உரையாடுமாறு கேட்டுக்கொள்கின்றோமென மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவின் தலைவர் பெட்ரிக் போல் வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல அமைப்புகள் ஏற்கனவே இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன என்றும் யஸ்மின் சூகா சுட்டிகாட்டியுள்ளார்.
பெயர்களை பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை பதிவு செய்யலாம் எனவும் யஸ்மின் சூகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies