தமிழகத்தில் இன்று முதல் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு நோ.. மாற்று பொருட்களின் பட்டியல்
01 Jan,2019
தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் ஜனவரி 1 முதல் இந்த 14 பொருட்களுக்கும் தடை.
உணவுப் பொட்டலங்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள்
டைனிங் டேபிள் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்
பிளாஸ்டிக் தெர்மகோல் தட்டுகள்
பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் பிளேட்டுகள்
பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட குவளைகள் கப்
பிளாஸ்டிக் டீ கப்
பிளாஸ்டிக் கேரி பேகுகள்
பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கேரி பேகுகள்
நெய்யப்படாத பேக்குகள்
வாட்டர் பாக்கெட்டுகள்
பிளாஸ்டிக் ஸ்டிரா
பிளாஸ்டிக் கொடிகள்
பிளாஸ்டிக் பைகள்
மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள்.
வாழை இலை
பாக்கு மட்டை தட்டு
அலுமினியம் பேப்பர்கள்
பேப்பர் ரோல்கள்
தாமரை இலை
கண்ணாடி, உலோக டம்பளர்கள்
மூங்கில், மர பொருட்கள்
பேப்பர் ஸ்டிரா
துணி, காகித, சணல் பைகள்
காகித, துணி கொடிகள்
செராமிக் பாத்திரங்கள்
மண் பானைகள்