புகலிடம் மறுக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்த உத்தரவு,
23 Dec,2018
அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்துமாறு, அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் (22-12-2018) உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடேசலிங்கம் பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட இந்தக் குடும்பம், அவர்கள் வசித்த பிலோலா என்ற இடத்தில் இருந்து அதிகாலை வேளையில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் மெல்போனில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இவர்கள் இறுதிநேர பிரயத்தனத்தின் காரணமாக அதில் இருந்து மீட்கப்பட்டனர்.
ஏற்கனவே இவர்களின் வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், அவர்களை நாடு கடத்துமாறு உத்தரவிட்டது.
எனினும் மேன்முறையீட்டின் தீர்ப்பு வரும் வரை நாடு கடத்தலை ஒத்திவைத்ததிருந்தது. இந்த நிலையில் மேன்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துமாறு அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், 2019 பெப்ரவரி 1ஆம் திகதிக்கு முன்னதாக இவர்களை நாடு நடத்த வேண்டாம் என்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குடும்பத்தை நாடு கடத்தவேண்டாம் என்றுகோரி 140,000 அவுஸ்திரேலிய மக்கள் கையொப்பங்களை இட்டு உள்துறை அமைச்சுக்கு அனுப்பியுள்ளனர்.