விக்னேஸ்வரனின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டது
28 Nov,2018
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொழும்பிலுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள பொலிஸ் மா அதிபர் இன்று பணித்துள்ளார்.
எனினும் குறித்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் திரும்பி தமது கடமை நிலையங்களிற்கு செல்ல கால அவகாசம் கோரி முதலமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
முதலமைச்சருடைய பதவிக்காலம் முடிந்த பின்னர் மெய்ப்பாதுகாவலர் இருவர் உட்பட நால்வர் பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர்.
இன்று காலை அவர்களை அனைவரும் மீள காவல்துறை உயர்மட்டத்தால் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் தற்போது கொழும்பு வந்திருக்கின்ற நிலையில் அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள அறிவுறுத்தலையடுத்தே பாதுகாப்பு நீக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.