அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம். நேரடி ஒளி பரப்பு.ஆவுஸ்திரேலியர் வர்ணனையில்.
16 Nov,2018
அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம்!
நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதாகவும், இதன்காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் வருகை தந்ததாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு கோரி அரச தரப்பினர் நாடாளுமன்றத்தில் கோசமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இதுதொடர்பிலான புகைப்படம் ஒன்றினை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.