இன்று கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்ஸ நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்!
15 Nov,2018
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய இரகசிய தூது விட்டு வருகிறார் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.
தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் அவரை மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும், இரா.சம்பந்தன் அவரை மீள இணைத்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் அப்போது அவரை மீள இணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
பெரும் சர்ச்சையின் பின்னர் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது, வியாழேந்திரன் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய முயற்சித்தார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்திற்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்த போது, அங்கு பிரசன்னமாகிய ஐ.தே.கவின் முக்கியஸ்தர் மலிக் சமரவிக்கிரம இந்த முயற்சியை மேற்கொண்டார். “வியாழேந்திரன் ஒரு நண்பர் மூலம் என்னுடன் பேசினார். அவர் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விரும்புகிறார். இப்போது நமக்கு ஆட்களும் தேவைதானே. அவரை இணைத்துக் கொள்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இணைத்து கொள்வீர்களா?“ என கேட்டார்.
அங்கு இரா.சம்பந்தனும் இருந்தார். அதனால் எல்லோரும் அதை சம்பந்தனின் முடிவிற்கே விட்டு விட்டார்கள்.
“அவர் நமக்கு இனி வேண்டாம்“ என இரா.சம்பந்தன் தனது முடிவை அறிவித்தார்