பழைய சபாநாயகர் மீது புதிய சபாநாயகர் பாய்ச்சல் முட்டாள்தனமென கூறினார்
14 Nov,2018
சபாநாயாகர் கரு ஜயசூரிய முட்டாள் தனமான செயலை செய்துள்ளார்.” என தினேஷ் குணவர்தன வசை பாடியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்ல பிரேரணைக்கு பெரும்பாண்மை கிடைத்து அப்பிரேணை நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேனையை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமலி துமலியை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல நாளை காலை வரை 10 மணி வரை பாராளுமன்றை ஒத்திவைக்கும் ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
லக்ஷ்மன் கிரியெல்லவின் முன்மொழிவிற்கும் பெரும்பான்மை கிடைத்ததையடுத்தே சபாநாயகர் பாராளுமன்றை நாளை காலை 10 மணி வரை பாராளுமன்றை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் குணவர்தன பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ஊடகவியாலளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த தினேஷ் குனவர்தன மேலும்,உங்களுக்கு பிரேரனையை நிறைவேற்ற முடியாது, பாராளுமன்றை அவமதித்துள்ளீர்கள் நிலையியற் கட்டளைகள் பின்பற்றபட வேண்டும். வாக்கெடுப்பிற்கு அழைப்பதாக இருந்தால் அது இலத்திரனியல் வாக்கெடுப்பாக அமைய வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஒரு சாராரை மாத்திரம் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் அழைக்க முடியாது.
பாராளுமன்றை கீழ் படுத்தியுள்ளார். அரசியலமைப்பை அவமதித்துள்ளார். சபாநாயகர் முட்டாள்தனமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவே நான் தெரிவிக்கிறேன்.” என கடுமையாக கருத்து தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் கடும் அமளி ஏற்பட்டது. வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். முன்னதாக ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.