மகிந்த அணிக்கு ஆள் சேர்க்கும் பாஸ் பாஸ்கி: கிழி வாங்கின சம்பவம்
04 Nov,2018
லண்டனை தளமாக கொண்டு இயங்கும் 3 எழுத்து வானொலி, பின்னர் தொலைக்காட்சியாகவும் மாறியுள்ளது. இதன் உரிமையாளர் கைகளில் பல மில்லியன் பவுண்டுகள். இவர் சில மாதங்களாக இலங்கையில் இருந்து கிழிஞ்ச பாலம் என்ற நிகழ்ச்சியை நடத்தி. வெளிநாட்டில் உள்ள மக்களின் பணத்தை பறித்து வந்தார். அந்த வேளையில் ரணிலுடன் கூட்டுச் சேர்ந்த இவர். ரணில் பதவி பறிபோக மகிந்த தான் இனி ஆட்சி பீடத்தில் இருப்பார் எனத் தெரிந்து தமிழர்களை அழித்த மகிந்த பக்கம் தாவியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் MP வியாழேந்திரன் மகிந்த அணிக்கு மாற வியாழமாற்றமாக இருந்த முக்கிய புள்ளி இந்த பாஸ் என்கிற பாஸ்கி தான் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களில் மிக மிக முக்கியமான நபர் ஒருவர் இந்த தகவலை ரகசியமாக வெளியிட்டுள்ளார். அதுபோக மகிந்த அணிக்கு ஆட் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்த முதலாளி தற்போது கனடாவில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் MP ஒருவரை தொடர்புகொண்டு மில்லியன் கணக்கான ரூபா தருகிறேன். மகிந்தவை ஆதரியுங்கள் என்று கேட்க்க. அந்த MP தூசனத்தால் ஏசி போனை வைத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கி, உடனே தனது 3 எழுத்து ஊடகத்திடம் சொல்லி, அவரைப் பற்றி அவதூறான செய்திகளை எழுதும்படி கூறியுள்ளார். இதனை நீங்கள் பலர் பார்த்திருப்பீர்களே ?
தற்போது மகிந்த அணிக்கு ஆள் சேர்க்கும் முக்கிய மாமாவாக இவர் கொழும்பிலும் யாழிலும் இருந்து செயல்பட்டு வருகிறார். இடை இடையே இந்திய அரசியல்வாதிகளை போல ஏழைகள் வீட்டுக்கு சென்று கிழிஞ்ச பாலம் நிகழ்சி நடத்துவதாக கூறி அவர்களோடு பேசி. அருகில் உள்ள மரத்தில் இருந்து ஜாம் பழம் பிடுங்கி சாப்பிடுவதும். இடை இடையே சோக மியூசிக் போட்டு நிகழ்சிகளை வெளியிட்டு, புலம்பெயர் நாட்டில் உள்ள மக்களின் காசை வறுகுவதும் இவர் வாடிக்கை.
இவர்கள் புலிவேஷம் போடுவதும், இலங்கையில் மகிந்தவோடு நிற்பதும். யாழ் கோவில் வீதியில் 6 கோடி ரூபாவுக்கு வீடு கட்டுவதும் யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறார். இதற்கு இந்தியாவில் இருந்து சிற்பிகளை கொண்டு வந்து வீட்டு சுவரில் ஓவியம் வடிக்கிறார். ஆனால் இந்திய கலைஞர்களை கொண்டு எதனையும் செய்யவேண்டாம்... ஈழக் கலைஞர்களை ஆதரியுங்கள் என்று மேசை மீது உட்கார்ந்து வியாக்கியாயம் பேசுவார். தான் யாழ்பாணத்தில் கட்டும் 6 கோடி ரூபா வீட்டினை 1 கோடிக்கு கட்டி விட்டு மிகுதி 5 கோடியை வறிய தமிழர்களுக்கு கொடுத்தால் என்ன ? அப்படி செய்வாரா அவர். இழிச்சவாய் தமிழர்கள் இருக்கும் வரை சுறண்டலாம் தானே...
ஏன் வெளிநாட்டில் உள்ள தமிழர்களிடம் நிகழ்ச்சியைக் காட்டி பணத்தை பறிக்கவேண்டும் ? லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கோவில்கள் தர்ம ஸ்தாபனங்கள் பல ஆண்டுகளாக ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவி வருகிறது. ஆனால் 2009க்கு பின்னர் வந்த இவர்கள் யார் ? முன்னர் எங்கே இருந்தார்கள் ? புலிகள் பலம் இழந்த பின்னர் இவர்கள் எப்படி மேடை ஏறினார்கள் ? இப்பொழுது என்ன செய்கிறார்கள் ? இவையே பெரும் கேள்விக் குறி. தமிழர்கள் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது !
வல்லிபுரத்தான்