இலங்கை அமைச்சு பதவிகள்!!
30 Oct,2018
இலங்கையில் இடம்பெற்ற ஒரு அரசியலமைப்பு சதிக்கு ஒப்பான பின்னணியில் தெற்கின் பிரபலமான அரசியல் தலைவர்கள் இருவர் தாமே அந்ததீவின் பிரதமர் என ஏட்டிக்குப் போட்டியாக உரிமைகோரும் விசித்திர அரசியல் நாடாளுமன்றம் கூட்டப்படாமலேயே இந்தோ- சீன பூகோள அரசியல் சூத்திரக்கயிற்று பொம்மலாட்ட சூட்சுமங்களுடன் தொடர்கிறது.
இந்தக்களத்தில் எந்தநேரத்தில் எதுவும் நடக்கலாம். பங்காளிகள் பகையாளிகளாக அல்லது துரோகிகளாக மாறலாம் முன்னைய வில்லன்கள் நண்பர்கள் ஆகலாம் சிறிலங்காவின் பிரதமர் தாமே என ரணிலும் மகிந்தவும் ஏட்டிக்குப் போட்டியாக உரிமை கோரினாலும் மகிந்த இன்று இந்த விடயத்தில் சற்று முன்னகர்ந்தார்.
இதன்அடிப்படையில் நண்பகலுக்கு சற்று முன்னர் சிறிலங்காவின் 22 வது பிரதமர் என்ற அடையாளத்தைப்பெற்றார் தனக்குரிய புதிய அமைச்சரவையும் பட்டியலிட்டார்.
இந்த அமைச்சரவை, மைத்திரி முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. இந்தப்பட்டியலில்ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம்,டக்ளஸ் தேவானாந்தாவுக்கும் (மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து விவகார அமைச்சு)இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் (மலை நாடு புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்) இடம்கிட்டியது.
இதற்கிடையே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மகிந்தவுக்கு ஆதரவளித்த வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகிய இருவரும இன்று ரணிலை சந்தித்துப் பேசினர் இதில் வடிவேல்சுரேஸ், நேற்று மஹிந்தவை, சந்தித்து பொன்னாடைபோர்த்தி, வாழ்த்துத்தெரிவித்தார். ஆனால் இன்று காலை மீண்டும் ரணிலுக்கே ஆதரவுஎன்றார். ஆனால் மாலையில் மகிந்தவிடம் இராஜாங்க அமைச்சுப்பதவியை பெற்றார்.
இதேபோல ஐக்கிய தேசியக்கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த சேனாநாயக்க மற்றும் ஆனந்த அளுத்கமே ஆகியோருக்கும் பதவிகள் கிட்டின.
இதற்கிடையே கடந்த சனியன்று கொழும்பில் உள்ள ராஜதந்திரிகளை ரணில் சந்தித்தது போல அரசதலைவர் மைத்திரி இன்று மாலை 5 மணியளவில் கொழும்பில் உள்ள ராஜதந்திரிகளை சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை வழங்கினார்.
மறுபுறத்தே ரணிலோ நாட்டின் சட்டரீதியான பிரதமர் தானே எனவும் நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளதாகவும் அலரிமாளிகையில் இருந்து அகலாமல்வாதிட்டு அதனை இன்று ஊடகச்சந்திப்பிலும் சொன்னார்.
நேற்று நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய மைத்திரி சொன்ன கதைகள் சிறுபிள்ளைத;தனமானவை எனச்சாடினார்.
நாட்டுமக்களுக்கு நேற்று உரையாற்றிய மைத்திரி தன்னையும் கோத்தபாய ராஜபக்சவையையும் கொலை செய்ய திட்டமிட்ட நகர்வில் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு இருப்பதாக மறைமுகமாக சொன்னார். நல்லாட்சி கருப்பொருளை ரணில் மிக வெளிப்படையாகவே முறைகேடு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
கூட்டுச்செயற்பாடுஅற்று தன்னிச்சையான தீர்மானங்ளை முரட்டுத்தனமாக ரணில் எடுத்ததால் நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கியதாகவும் சாடினார்
ரணிலுக்கும் தனக்கும் கொள்கை ரீதியலான முரண்பாடுகள் ஏற்பட்டதோடு அல்லாமல் கலாசார வேறுபாடுகளும் ஏற்பட்டதாகவும் மைத்திரி கூறினார் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் இதுவரை ஆயிரத்துக்குமேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டிருந்த ரணிலின் பாதுகாப்புவலையமைப்பு 10 அதிகாரிகளின் ஒப்புக்கு சப்பு பாதுகாப்புடன் அதிரடியாக சுருக்கபட்டது
ஆயினும் ரணிலின் ஆட்சியமைப்பு உரிமைகோரல் தொடர்கிறது. இந்த நகர்வுகளுக்கு மத்தியில் இலங்கைத்தீவில் நடக்கும் இந்த விசித்திர அரசியல்நாடகத்துக்குள் இப்போது அனைத்துலக முகங்களின் கௌவர தோற்றங்களும் புகுந்துள்ளன.
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு மைத்திரியிடம் அமெரிக்க இராஜங்க திணைக்களம் தனது வளையத்தை எறிந்துள்ளது.
இதேபோல ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேர்சும் தனது தரப்பு வளையத்தை எறிந்து ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து நகரும்படி கோரியுள்ளார்.
ஆகமொத்தம் நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்படவேண்டும் என்ற குரல்கள் உள்ளுர் முதல் உலக அரங்குவரை வலுத்துள்ளன.
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்க்க நாடாளுமன்றத்தை உடனடியாகக்கூட்டுமாறு, தமிழ்தேசியசுட்டமைபபு முதல் ஜே.வி.பி வரை பல கட்சிகள் கோரியுள்ளன இதுகுறித்து சபாநாயகர் கரு ஜயசூரியாவை நோக்கி குரல்கள் எழுந்துள்ளன. இவ்வாறு குரல்கள் எழுவது ரணிலுக்கு வாய்ப்;பாக இருக்கும்.
ஏனெனில் இப்போது நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் அதில்; ரணில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடும் என்பது மகிந்தவுக்கும் தெரியும். மைத்திரிக்கும்புரியும.; இதனால்தான் குதிரை பேரங்களுக்கு இடமளித்து உறுப்பினர்களை விலைகொடுத்த வாங்கும் தில்லாலங்கடிக்காக இரண்டுவார அவகாசத்துடன் மைத்திரி அதனை நவம்பர் 16 வரை முடக்கியிருக்கிறார்.
மகிந்தவால் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய நிலை இருந்தால் இன்றே நாடாளுமன்றம் கூட்டப்பட்டிருக்ககூடும். ஆனால் அதற்குசாத்தியங்கள் இல்லாதால் அவ்வாறு இடம்பெறவில்லை;
இப்போது நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்படவேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருவது மைத்திரி-மகிந்த ஆகிய புதியதேன்நிலவு ஜோடிகளுக்கு நெருக்கடியை வழங்கும்
இதற்கிடையே இலங்கையின் சாபக்கேடாக தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய குதிரைபேரஆட்;டங்களில் இரண்டு தரப்புக்களுமே ஈடுபடுகின்றன. ஆயினும் இந்த நகர்வுகளில் மகிந்தாவாதிகள் அனுபவம் வாய்ந்த இதில் கில்லாடிகள் என்பது ஊரறிந்தவிடயம்.
இப்போது இதேபாணியில் நகர ரணில்தரப்பும் நகர்கிறது. இதனால்தான் லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சிலர் எதிர்வரும் நாட்களில் யானையில் ஏறுவார்கள் என அதன் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் இவ்வாறு காலத்துக்கு காலம் நகர்த்தப்படும் படுமோசமான அரசியல் கலாசாரங்களே அந்தத்தீவை இப்படி அவமானகரமாக வீழ்த்திவருகின்றன.
ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்தை தமிழ்மக்களுக்கும் காட்டவில்லை. தெற்கின் அரசியல்களத்திலும் அவர்கள் காட்டவில்லை பேரினவாதகட்சி அரசியல் போட்டிக்கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை. இதனைத்தான் இலங்கை அரசியல்வாதிகள் இப்போதும் நிரூபித்துள்ளனர்.
ஆனால் கடந்த மூன்றரை வருடங்களாக வாய்கிழிய கிழிய ரணிலுடன் ஜகப்பாலன நல்லாட்சி என சொல்லிய மைத்திரி இப்போது இவ்வாறு குற்றச்சாட்டுக்களை அடுக்குவது. இலங்கையில் தலையாரியில் இருந்து அடிமட்ட உறுப்பினர் படுமோசமான அரசியல் கலாசாரம் விரவியிருப்பதற்கு இன்னொரு ஆதாரம்.
நாட்டில் பெரும் இரத்த ஆறு பெருக்கெடுக்கலாம்; விடுத்துள்ள எச்சரிக்கை!
Oct 30, 2018 1525
சிறிலங்கா அரசியலில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள பெரும் குழப்பத்திற்கு நாடாளுமன்றத்திற்குள் தீர்வு காணாது அதனை வெளியில் எடுத்துச் சென்றால் நாட்டில் பெரும் இரத்த ஆறு பெருக்கெடுக்கலாம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
இதனால் இனியும் தாமதிக்காது நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதற்கு மகாநாயக்கத் தேரர்கள் உரியவர்களுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அவசரமாக கண்டிக்கு விஜயம் செய்து மகாநாயக்கத் தேரர்களை சந்தித்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி, மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டி மல்வது மகாநாயக்கத் தேரர்கள், அஸ்கிர பீட மகாநாயக்கத் தேரர் மற்றும் துணை மகாநாயக்கர்களையும் தனித்தனியே சந்தித்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அறிவுறுத்துமாறும் சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“ இரண்டு தரப்பினரும் தமக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி வருகின்றனர். அதனால் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதன் ஊடாக புதிய பிரதமரை தெரிவு செய்துகொள்ளமுடியும். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது தொடர்பிலோ, நாடாளுமன்றத்தை கூட்டுவதோ குறித்த அரசியல் யாப்பு ஏற்புத் தன்மைகள் தொடர்பில் எனக்கு பிரச்சனையும் இல்லை.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதே எனது அவசர தேவையாக இருக்கின்றது. அதற்காகவே மகாநாயக்கத் தேரர்களையும் சந்தித்து அவர்களுக்கு தற்போதைய நிலமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றேன். இதற்கமைய அவர்கள் தமது கடமையை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை நாடாளுமன்றத்திற்குள் தீர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்ற நிலையில், அதனை தடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியில் எடுத்துச்செல்ல சிலர் முற்படுவதாகவும் சபாநாயகர் குற்றம்சாட்டினார்.
துரதிஸ்டவசமாக அவ்வாறான நிலமையொன்று நாட்டில் ஏற்படுமானால் ஏராளமானோரின் உயிர்களை இழக்க நேரிடும் என்றும் சபாநாயகர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
“ மிகவும் முக்கியத்துவம் மிக்க தேசிய கடமையை நிறைவேற்றுவதற்காகவே நான் இன்று இங்கு வந்தேன். எமது நாட்டில் இன்று அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நிலமையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்திற்கு பாரிய பொறுப்பொன்று இருக்கின்றது.
நாடாளுமன்றத்தின் ஊடாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பெரும் ரத்த ஆற்றை பெருக்கெடுக்க வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில ஊடகங்களை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். இந்த முறைகேடான நடவடிக்கைகள் காரணமாக எமது நாட்டிற்கு சர்வதேச அரங்கில் பெரும் அபகீர்த்திக்க முகம்கொடுக்க நேரிட்டிருக்கின்றது.
இந்த நிலையில் குறித்த பிரட்ச்சனையை நாடாளுமன்றத்திற்குள் தீர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன அறிவுறுத்தியுள்ளன. தற்போதைய பிரச்சனைக்கு தியவன்னா ஓயாவிற்குள் தீர்த்துக்கொள்ள முடியும்.
இதனை அதற்கு வெளியில் கொண்டுசென்றால் பாரிய உயிர் இழப்புக்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது போய்விடும். இதற்காகவே ஜனாதிபதியிடம நேற்றைய தினம் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்