மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன?
27 Oct,2018
மகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பரிகாசம் செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது என தெரிவித்துவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள் உருத்திரகுமாரன் சிறிசேன தனது நடவடிக்கையின் மூலம் நாங்கள் தெரிவித்து வந்த விடயம் சரியானது என்பதை நிரூபித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலையாளியை பிரதமராக நியமித்துள்ளதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை சிறிசேன கேலிக்கூத்தாக்கியுள்ளார் எனவும்; உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தை அமைத்தமைக்காக இலங்கைக்கு ஐநா தனது பாராட்டத்தை தெரிவித்தது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கை மீளக்கண்டுபிடித்துள்ள ஒரேயொருவர் மகிந்த ராஜபக்ச எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பெரும்பான்மையின தலைவர்கள் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.