இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”
15 Oct,2018
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
இனப்படுகொலையும் கிளஸ்டர் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு குறித்து மேலும் சபா குகதாஸ் விளக்குகையில் வன்னிப் பகுதியின் இறுதிப் போரில் விடுதலை புலிகளின் இராணுவ இயந்திரத்தை சிதைப்பதற்காக இலங்கை இராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகள் பெருமளவு அப்பாவி மக்களை கொன்றுறொழித்தது.
யுத்தம் முகமாலை பகுதியில் ஆரம்பித்தபோது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இராணுவம் சுதந்திரபுரம் வந்ததும் மிகத் தீவிரமாக கிளஸ்ரர் குண்டுகள் மக்கள்மீதும் குடியிருப்புக்கள் மீதும் பாய்ந்தன.
இதற்கான ஆதாரங்கள் யுத்தம் முடிவடைந்து 2011 ஆம் ஆண்டின் பின் கண்ணிவெடி அகற்றும் ஹெலோ ரஸ்ற் (Hello Trust) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
குறிப்பாக பச்சிலைப்பள்ளி சுண்டிக்குளம் சாலை சுதந்திரபுரம் புதுக்குடியிருப்பு ஆனந்தரபுரம் மாத்தளன் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கரை போன்ற இடங்களில் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இக் கிளஸ்டர் குண்டுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக உள்நாட்டு யுத்தத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில் 118 நாடுகள்தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன. ஆனால் இலங்கை அதில் ஒப்பம் இடவில்லை ஆகவே சர்வதேச சட்டங்களை மீறியமை மிகப் பிரதானமான போர்க்குற்றம் ஆகும். இறுதிப் போரில் கிளஸ்டர் குண்டுகள் மிக் விமானங்கள் மூலமாக பெருமளவில் வீசப்பட்டன. அத்துடன் எவ்.௭ வன் விமானங்களும் தாக்குதல் நடாத்தின. ஆட்லறி ஷெல்களுக்கு பதிலாகவும் பயன்ழுடுத்தின. போர்த் தவிர்ப்பு வலயத்தில் இக் குண்டுத் தாக்குதல் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஆனந்தபுரம் சண்டையில் 600 இற்கும் மேற்பட்டபுலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது. என்பது கிளஸ்டர் குண்டுகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமை இதனால் தான் உடல்கள் சிதைந்தும் கருகியும் காணப்பட்டன.
யுத்தம் முடிவடைந்த பின் பெருமளவு தடயங்கள் அப்போதைய மகிந்த அரசாங்கம் அழித்துவிட்டது. காரணம் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்தம் நடந்த பகுதியை பார்வையிட செல்லும் முன் அவ்வேலைகள் இடம்பெற்றுள்ன.
உண்மையில் இங்கு பயன்படுத்தப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் ரஷ்யா நாட்டுத் தயாரிப்பு என்பதனை உறுதி செய்துள்ளன. யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுள் இக்குண்டின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.