மகனைத் தாக்க வந்தவர்கள் தாயை துடிதுடிக்க கொலை செய்த கொடூரம் : யாழில் பயங்கரம்
15 Oct,2018
மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் இன்றிரவு 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது.
வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்துள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மகன் காயமடைந்துள்ளார்.
"இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் சென்ற என்னுடன் சிலர் முரண்பட்டுக்கொண்டனர்.
அவர்கள் மேலும் சிலருடன் 8 பேராக எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் வந்தனர்.
கையில் பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வந்த அவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
அவர்கள் என்னைத் தாக்குவதை அம்மா தடுத்தார். அப்போது அம்மாவின் தலையில் பொல்லு மற்றும் கம்பியால் தாக்கினர். அம்மா என் முன்னிலையில் துடிதுடித்து உயிரிழந்தார்” என்று மகன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் குழு தாக்குதல்: மகனை காப்பாற்ற முயற்சித்த தாய் கொல்லப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது, ஏனைய சில இளைஞர்கள் அவருடன் முரண்பட்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனின் வீட்டுக்கு எட்டு பேர் கொண்ட குழுவொன்று, மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் வந்துள்ளனர்.
இதன்போது குறித்த கும்பல் தடிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் இளைஞனின் வீட்டுக்குள் புகுந்து இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இவ்வேளை வீட்டில் இருந்த இளைஞனின் தாயார் தனது மகனை காப்பாற்ற முயன்றபோது, தாயார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மகனும் படுகாயமடைந்துள்ளார். அதனை அடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் படுகாயமடைந்த இளைஞனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் - மூவர் சிக்கினர் ; மேலும் மூவரை தேடி வலைவீச்சு
ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பப் பெண்ணின் மகன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த மூன்று பேரையும் கைதுசெய்துள்ள பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் விரைவில் கைதுசெய்யப்படுவர் எனவும் குறிப்பிட்டனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்தது என்று பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது