அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி உறுதிஸ சுமந்திரன்
12 Oct,2018
அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து தாம் ஆராய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி கலந்துரையாட ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.