நல்லூரில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நினைவு
26 Sep,2018
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூர்வமாக நல்லூரில் இடம்பெற்றது.
எந்த விதமான கட்சி பேதங்களுமின்றி – முன்னுரிமைகளின்றி உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வட கிழக்கு மூலையில் தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்தில் மிகச் சரியாக 10 : 48 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அந்த வேளையில் கைதடியில் இருந்து இரண்டு தூக்குக் காவடிகளில் வந்து இரு உணர்வாளர்கள் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.
தொடர்ந்து தியாகி திலீபன் நினைவாலயம் அமைந்துள்ள பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.கலந்து கொண்ட அனைவரும், ஒற்றுமையுடன் உணர்வு பூர்வமாக நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.
மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முதன்மைச் சுடரேற்றியதுடன், தியாகி திலீபனின் உருவப் படத்துக்கு மலர் மாலை சூடிஅஞ்சலி செய்தததைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அனைவரும் தமது அஞ்சலியை செலுத்தினர்.
இந் நிகழ்வில், யாழ். மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், மூத்த முன்னாள் போராளி மனோகர் ( காக்கா அண்ணன்), ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரமுகர்கள் உட்பட பெருமளவான முன்னாள் போராளிகள், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.