இலங்கையில் மீண்டும் போர் ஏற்படுவதற்கு இந்தியா அனுமதிக்கமாட்டாதெனவும், தாம் எப்போதும் தமிழர்களுக்கே ஆதரவாக இருக்கப் போவதாகவும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி, கூட்டமைப்பின் தலைவரிடம் உறுதியளித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய உறுதிமொழிகள் இலங்கைத் தமிழர்களுக்குப் புதிதானவையல்ல. இந்தியத் தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றை மறந்து விடுவதும் வழக்கமாகி விட்டது. தமிழர்களை அவர்கள் குறைவாக மதிப்பிடுவதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
அக்கறைகொள்வதாகக்
காட்டிக்கொள்கிறது இந்தியா
இந்தியா, தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தில் அக்கறை காட்டுவதாகக் காட்டிக்கொள்கின்றது. இதே இந்தியா மனம் வைத்துச் செயற்பட்டியிருந்தால் அரசியல் தீர்வு எப்போதோ கிடைத்திருக்கும். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவையும் எழுந்திருக்காது. தமிழ்மக்கள் இவ்வளவு அவலங்களை எதிர்கொண்டிருக்கவும் மாட்டார்கள்.
தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்திய எந்தவகையிலாவது தீர்வைப் பெற்றுத் தருமெனவும் நம்பினார்கள். இந்தியாவின் கபடத்தனத்தை விடுதலைப் புலிகள் நன்கு தெரிந்துகொண்டதால் இந்தியாவை நம்புவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. இந்திய–இலங்கை ஒப்பந்தத்தை அவர்கள் முற்றாக நிராகரித்தமைக்கு இதுவே காரணமாகும். ஆனால் அன்றிருந்த தமிழ்த் தலைவர்கள் இ்ந்த ஒப்பந்தத்தை முழு அளவில் ஆதரரித்தார்கள். இதன்மூலமாகத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமெனவும் நம்பினார்கள்.
இந்தியத் தலையீட்டை
புலிகள் விரும்பவில்லை
இந்தியப் படைகளின் இலங்கை வருகையைப் புலிகள் ஆரம்பத்திலேயே விரும்ப வில்லை. இந்தியா நயவஞ்சகமான முறையில் செயற்படுவதாக அவர்கள் கூறியது பின்னாளில் நிதர்சனமாகி விட்டது. ஆனால் தமிழ்த் தலைவர்கள் புலிகளின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. புலிகளின் முக்கிய தளபதிகளின் உயிரிழப்புக்களுக்குப் பின்னால் இந்திய அரசு செயற்பட்டமை புலிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் இந்தியப் படைகளுக்கும், புலிகளுக்குமிடையே போர் மூண்டது. இதில் ஏரா ளமான தமிழ்மக்கள் இந்தியப் படைகளால் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தல்க ளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் அப்போதுகூட தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தியாவை நம்பினர்.
இந்தியப் படைகளின் வருகையின் பின்னணியில் இந்தியாவின் அப்போதைய தலைமை அமைச்சராகவிருந்த ராஜிவ்காந்தி செயற்பட்டதால் புலிகள் அவர்மீது தீராத வெறுப்பைக் கொண்டிருந்தனர். இறுதியில் 1991ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையின் பின்னணியில் பலர் இருந்ததாகக் கூறப்பட்டபோதிலும், முழுப்பழியும் புலிகளின் தலைமீதே வீழ்ந்தது.
இறுதிப் போரில்
இந்தியாவின் பங்கு
இலங்கையில் (இறுதிப் போர் இடம்பெற்றபோது) மறைந்த தலைமை அமைச்சரான ராஜிவ்காந்தியின் துணைவியார் சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இந்தியாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இந்திய அரசு இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கியது. இறுதிப் போரில் இலங்கை வெற்றி பெற்றதற்கு இந்தியாவே முக்கிய காரணியாக விளங்கியது.
இதனால் போரில் கொல்லப்பட்ட, காயமடைந்த, காணாமலாக்கப்பட்ட தமிழ்மக்களின் விடயத்திலிருந்து இந்தியா விலகிநிற்க முடியாது. ஆனால், இந்தியா இதிலிருந்து சாதுரியமாகத் தப்பித்துக்கொண்டது. பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாக அக்கறை எதையும் அது காட்டிக்கொள்ளவில்லை. இந்தியா அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தலைமை அமைச்சர் நரேந்திரமோடி ஆகியோர் இங்கு வருகை தந்தபோது தமிழர்களுக்கு உதவுவதாகக் கூறிச் சென்றனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இப்போது நரேந்திரமோடி கூட்டமைப்பின் தலைவரிடம் முன்பு கூறியதையே திரும்பவும் கூறியுள்ளார்.
சீனாவை விரட்டுவதுதான் இந்தியாவின் நோக்கம்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்ப தில்தான் இந்தியா தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றது. இதற்காக இலங்கையைக் கையில் போட்டுக்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் இலங்கையின் வெறுப்பைச் சம்பாதிப்பதற்கு அந்த நாடு விரும்பமாட்டாது.
இந்த நிலையில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா , இலங்கைக்கு நெருக்கடி கொடுக்குமென எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனால் மோடி வழங்கிய வாக்குறுதி நிறை வேறுமென எதிர்பார்க்கமுடியாது.
தமிழ்த் தலைவர்கள் இந்தியாவை இனியும் நம்பிக்
கொண்டிருப்பதில் பயனில்லை
இதேவே
இந்திய –இலங்கை அரசுகளைத் தமிழர்கள் இனியும் நம்பலாமா?

இதேவேளை நல்லாட்சி அரசின் பொய்வேடம் மெல்ல மெல்லக் கலைந்து வருகின்றது. அரச தலைவரின் சமீபகால நடவடிக்கைகள் இதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இறுதிப்போரின்போது குற்றமிழைத்த படையினரைக் காப்பாற்றுவதிலேயே அவர் கண்ணும் கருத்துமாகச் செயற்படுகின்றார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்து நிற்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வும் இனப் பிரச்சினைக்கான தீர்வும், தொைலவில்கூடத் தெரிவதாக இல்லை. இந்தியத் தலைமை அமைச்சர், மகிந்தராஜபக்சவுக்கு வழங்கிய முக்கியத்துவம் தொடர்பாக அரசு கவலைப்படாமல் இருக்க முடியாது.
இதனால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமா? என்பது சந்தேகமாகவேயுள்ளது. ஆகவே தமிழர்களும் தமிழ்த் தலைவர்களும் இந்தியாவையும் இலங்கை அரசையும் நம்பிக் கொண்டிருப்பதால் பயனொன்றும் கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மையானது.
ளை நல்லாட்சி அரசின் பொய்வேடம் மெல்ல மெல்லக் கலைந்து வருகின்றது. அரச தலைவரின் சமீபகால நடவடிக்கைகள் இதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இறுதிப்போரின்போது குற்றமிழைத்த படையினரைக் காப்பாற்றுவதிலேயே அவர் கண்ணும் கருத்துமாகச் செயற்படுகின்றார்.