புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது -
05 Sep,2018
தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில் தமிழினம் இன்னமும் பின்தங்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன்