தமிழகத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துடுப்பாட்டபோட்டிகள் !!
                  
                     26 Aug,2018
                  
                  
                     
					  
                     
						
	
	தமிழகத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துடுப்பாட்டபோட்டிகள் !!
	நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த துடுப்பாட்ட போட்டிகளில் மாத்தூர் அணி முதல் பரிசைப் பெற்றுள்ளது.
	32 அணிகள் பங்கேடுத்திருந்த இப்போட்டிகளில் இரண்டாம் இடத்தினை நமண்டி கிராம அணி பெற்றிருந்தது.
	தமிழக உளவுத்துறையின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்ததாக நிலையில், விரிவான விளம்பரங்கள் ஏதும் செய்யாத நிலையிலேயே இப்போட்டிகள் இடம்பெற்றிருந்ததாக நா.தமிழீழ அராசங்கத்தின் தமிழக பிரதிநிதிகளில் ஒருவரும் இப்போட்டிகளை ஒருங்கிணைத்தவருமான தமிழினியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
	நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்ல, தமிழகத்திலும் தோழமையினை வளர்த்தெடுக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.