குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை பெற்றுக்கொடுத்துள்ள வடமாகாண சபை
24 Aug,2018
..இலங்கையின் அரசியல் வரலாற்றில் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்கள், தமது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கயவர்களுக்கே, தமது அலுவலக ஊழியர், உதவியாளர்கள், செயலாளர்களை நியமிப்பது அரசியல் பாரம்பரியமாக தொடர்கின்ற விடயமாக இருந்து வருகிறது.
எனினும் இந்த நடைமுறையை மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே (JVP) துணிவுடன் தகர்த்திருந்தது. அந்தக் கட்சியின் மூலம் தெரிவுசெய்யப்படும் அரசியல் உறுப்பினர்களின் சலுகைகள் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகவும், கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவையாகவும் பேணப்படுகிறது.
எனினும் 3 தசாப்த்தத்திற்கு மேலான யுத்தத்தினால் அழிவுற்று இருக்கும் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், மக்களின் விடுதலை என்ற முழக்கங்களை முன்வைத்து மக்களிடம் வாக்குகளை வாரி எடுக்கும் தமிழ் கட்சிகள், போரினால் பாதிக்கப்பட்ட, குடும்பங்கள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களில், அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று தெரியாது தவிப்பவர்களுக்கு இந்த வேலை வாய்ப்புக்களை வழங்கி இருப்பார்களானால் குறைந்தது நுற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் யுத்தக் காயங்களை, வடுக்களை ஆற்றியிருக்க முடியும் என்ற கருத்துக்கள் பரவலாக எழுந்துள்ளனஸ.