வலி.வடக்கில் 4.7 ஏக்கர் காணி அடுத்தவாரம் விடுவிப்பு
18 Aug,2018
வலி.வடக்கில் காங்கேசன்துறையில் 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலப் பரப்பு எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி இராணுவத்தின் 515ஆவது பிரிகேட் அமைந்துள்ளது.
அந்த முகாமின் ஒரு பகுதி காணி மாத்திரமே எதிர்வரும் செவ்வாய்க் கிழமை விடுவிக்கப்படவுள்ளது.