இவ்வளவு காலமும் சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் , திடீரென புத்தரின் பாதமாக மாறியது?
16 Aug,2018
இலங்கையில் சிறுபான்மை மக்களின் பாரம்பரியங்கள், கலாச்சார பெருமைகளை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்னொரு நடவடிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இந்துக்களின் பாரம்பரியங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டும், இல்லாமல் ஆக்கப்பட்டும் வருகின்றது. இவ்வாறான சில மோசமான விடயங்களால், தமிழர்களின் தொன்மையை யாராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது என்பது தான் வெளிப்படையான உண்மை.
அந்த வகையில் கதிர்காம பகுதியில் பல தொன்மையான தமிழ் பாரம்பரிய விடயங்கள் சிங்கள பாரம்பரிய விடயங்களாக மாற்றம் பெற்றுள்ள நிலையில் , புகழ் பெற்ற சிவனொளிபாத மலையின் தொடக்க பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை திட்டமிட்ட முறையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது, தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வளவு காலமும், சிவனடி பாதம் என இடம்பெற்றிருந்த பெயர்ப்பலகை இப்போது திடீரென கௌதமபுத்தரின் ஸ்ரீ பாதஸ்தானம் என மாற்றப்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்தார்கள்? யார் இப்படி செய்தார்கள்? இவ்வாறான இனக்குரோதங்களை நெருப்பாக கொட்டி அதில் குளிர் காயும் எண்ணம் கொண்டவர்களின் நோக்கம் என்ன? என பல்வேறு கேள்விகள் தற்போது இலங்கை மட்டுமல்லாது, உலக வாழ் தமிழர்களிடையே எழ ஆரம்பித்துள்ளது.