விடுமுறைக்கு செல்வோர் ஆபாச DVD யாழில் கொடுக்கிறார்கள்-
28 May,2018
விடுமுறைக்கு யாழ் சென்று திரும்பும் பலர், சூட்கேசில் கருவேப்பிலையை எடுத்து வந்து விற்று டிக்கெட் காசை கவர் பண்ணுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க. யாழ் செல்லும் சில காவாலிகள், நீலப் படங்களை DVD ஆக கொண்டு சென்று யாழில் உள்ள சில கடைகளில் விற்பனை செய்து டிக்கெட் காசை கவர் பண்ணுகிறார்கள்.
கட்டநாயக்க விமான நிலையத்தில் வேலை பார்க்கும் தமிழ் அதிகாரி ஒருவர், இதுபோன்ற ஒரு நபரை மறித்து அவர் கொண்டு சென்ற 67 DVD க்களை பறிமுதல் செய்ய முற்பட்டுள்ளார். ஆனால் அங்கே வேலை பார்க்கும் சிங்கள அதிகாரிகள். இதனை இவர் யாழ்ப்பாணம் கொண்டு செல்ல உள்ளார். அங்கே உள்ள இளைஞர்கள் பாத்து கெட்டுப் போகட்டும் . கெட்டு குட்டிச் சுவர் ஆனால் தான் எமக்கு நல்லது. ஆன படியால் அவரை தடுக்க வேண்டாம் அப்படியே விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
இந்த உயர் அதிகாரிகள் பேச்சை தட்ட முடியாத தமிழ் அதிகாரி அவரை அப்படியே விட்டு விட்டார். ஆனால் ஒரு வகையில் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதனை அவர் மீடியாவுக்கு சொல்ல தயங்கவில்லை. இது இவ்வாறு இருக்க , ஈ சிகரெட் மற்றும் போதை ஏற்றும் ஈ சிகரெட்டையும் பலர் வாங்கிச் சென்று யாழ்ப்பாணத்தில் விற்று வருகிறார்கள். இவர்கள் ஊடாகவே பல போதைப் பொருட்கள், நீலப் படங்கள், என்பன யாழ்ப்பாணம் செல்வதாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் டிக்கெட் காசை கவர் பண்ண இவ்வாறு சமூக சீரழிப்பு வேலையில் தமிழர்கள் சிலர் இறங்கியுள்ளது பெரும் வேதனை தரும் விடையம்.
இது போன்ற சமூக சீர்கேடுகளை எமது இணையம் வெளிச்சம் போட்டு காட்டும். இன்னும் சொல்லப் போனால் இதுபோன்ற சிலரது முகத்திரையைக் கிழிக்க அவர்களது புகைப்படங்களும் வெளியாகும். எனவே இதுபோன்ற சீர்கேடுகளை செய்பவர்கள் உடனே நிறுத்துங்கள்