ஜூலியும் நர்ஸாம் : போலீஸ் தடை
29 Nov,2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது அதில் பங்கேற்று கவனம் ஈர்த்தவர் ஜூலி. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் அதிகளவில் பேசப்பட்டார். தற்போது அவர் கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸில் பங்கேற்ற போது தான் ஒரு நர்ஸ் என்று அடிக்கடி சொல்வார் ஜூலி. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி சென்னையில், நர்ஸ்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்க ஜூலி சென்றார். நானும் நர்ஸ் தான் என்னையும் உள்ளே செல்ல அனுமதியுங்கள் என போலீசாரிடம் கூறினார். ஆனால் அவரை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.