வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கு எதிராக வழக்கு!
சிசுவின் சடலத்தை வீதியில் விட்டுச் சென்றது யார்?
24 Jan,2014
வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கு எதிராக வழக்கு!
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க கூட்டமைப்பின் சக உறுப்பினர்கள் தயாராகியுள்ளனர். தன்னிச்சையான அவரது செயற்பாடுகளிற்கு எதிராகவே அவரது கட்சி சார்ந்த ஏனைய உறுப்பினர்கள் ஜவரும் இணைந்து வழக்கு தாக்கல் செய்ய முற்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளினில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நகரசபையின் உறுப்பினராக இருந்தவருமான சிவாஜிலிங்கம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வகையினில் யாழ்.மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகளினில் கடந்த சில தினங்களாக சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜிற்கு எதிராக அவரது கட்சி சார்ந்த 5 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க முற்பட்டிருந்தனர். இந்நிலையில் அதனை முறியடிக்க தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு அனந்தராஜ் போராட்டத்தினை நடத்திய நிலையினல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள சக உறுப்பினர்கள் ஜவரும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர். இதையடுத்தே தற்போது வழக்கு தாக்கல் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிசுவின் சடலத்தை வீதியில் விட்டுச் சென்றது யார்?
கண்டி - மஹய்யாவ பிரதான வீதியில் இருந்து சிசுவொன்றின் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் குறித்த சிசுவின் சடலத்தை அங்கு விட்டுச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.