ஈபிடிபி தலைமையில் கூட்டமைப்பு அங்கம் பெறுவாரா சங்கரி?
11 Jan,2014

ஈபிடிபி தலைமையில் கூட்டமைப்பு அங்கம் பெறுவாரா சங்கரி?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறாத அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஈழமக்கள் ஜனநாயக் கூட்டமைப்பாக ஒன்றிணைப்பதற்கான முக்கிய கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்பெறாத தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகச் சொல்லிக்கொள்கின்ற அரச சார்புகட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈபிடிபி இறங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இதன் முதற்கட்டமாக ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் வரதர் அணி, ஸ்ரீரெலோ ஆகிய கட்சிகள் அங்கம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 4மணிக்கு ஈபிடிபியின் தலைமையகம் அமைந்துள்ள யாழ்.சிறிதர் திரையரங்கில் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஆனந்த சங்கரி பங்கேற்பது தொடர்பில் அவருடைய கட்சியிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகிவில்லை.
எதிர்காலத்தில் குறித்த கட்சிகள் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கூட்டமைப்பு என்று செயற்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.