இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன

09 Jan,2014
 

 

இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன


 
இறுதி யுத்தம் நடை­பெற்ற இடத்தில் தடை­செய்­யப்­பட்ட கொத்துக் குண்­டு­களும் இர­சா­யனக் குண்­டு­களும் பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஆயு­தங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என தம்­மிடம் மக்கள் முறை­யிட்­டுள்­ள­தா­கவும் மோதல் தவிர்ப்பு வல­யங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு அங்கும் பலர் கொல்­லப்­பட்­ட­தா­கவும் சர்­வ­தேச போர்க்­குற்ற விவ­கா­ரங்­களைக் கையாளும் அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப்பிடம் மன்னார் மற்றும் யாழ்.மறை­மா­வட்ட ஆயர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இப்­ப­கு­தியில் இடம்­பெற்­றுள்ள  போர்க்­குற்­றங்கள்  தொடர்­பாக வெளிக்­கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்­ட­னை­களைப் பெற்றுக் கொடுத்து இனங்கள் சமா­தா­னத்­துடன் வாழ்­வ­தற்கு சர்­வ­தேசம் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறித்த தூது­வ­ரிடம் கூட்­டாக கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

போர்க் குற்ற விவ­கா­ரங்கள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக வடக்­கிற்கு வந்­துள்ள சர்­வ­தேச போர்க்­குற்ற விவ­கா­ரங்­களைக் கையாளும் அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆயரின் இல்­லத்தில் யாழ். ஆயர் தோமஸ் செளந்­த­ர­நா­யகம் மற்றும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆகி­யோ­ருடன் விசேட சந்­திப்பு ஒன்றை மேற்­கொண்டார்.

இச்­சந்­திப்புத் தொடர்­பாக யாழ்.மறை­மா­வட்ட ஆய­ருடன் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­க­ளுக்­கான கார­ணங்­களைக் கண்­ட­றி­வ­தற்கும் அதற்­கான நிவா­ர­ணங்­களைத் தேடு­வ­தற்­கா­க­வுமே குறித்த தூதுவர் இலங்­கைக்கு வந்­துள்ளார். நான் குறித்த தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றிய விட­யங்­களை யாழ்.ஆயர் தோமஸ் செளந்­த­ர­நா­யகம் ஆண்­டகையும் குறித்த தூது­வ­ருக்கு விளக்கியுள்ளார்.

யுத்­தத்­தின்­போது பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்­பாக எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். அந்த வகையில் வானத்­தி­லி­ருந்து வீசப்­பட்ட கொத்துக் குண்­டுகள் மற்றும் விமா­னத்­தி­லி­ருந்து வீசப்­பட்ட  கிஎயார் பம்ஸ் கி எனப்­படும் தடை­செய்­யப்­பட்ட குண்­டுகள் ஆகி­ய­வற்­றினால் கொல்­லப்­பட்ட மக்கள் தொடர்­பாக எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.

இத்­த­கைய குண்­டுகள் வானத்­தி­லேயே அந்­த­ரத்தில் வெடிப்­பதால் அதி­க­மான பிர­தே­சங்­க­ளுக்கு பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய குண்­டு­க­ளாகும். இதேபோல் யுத்­தத்தின் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட இர­சா­யனக் குண்­டுகள் தொடர்­பா­கவும் குறித்த தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.

இத்­த­கைய இர­சா­யனக் குண்­டு­களை முதன்­மு­த­லாக 2008ஆம் ஆண்டு 7ஆம் மாதக் காலப்­ப­கு­தியில் அக்­க­ரா­யனில் பயன்­ப­டுத்­தி­னார்கள். இத்­த­க­வலை முள்­ளி­வாய்க்­காலில் இறுதி யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் இருந்த மக்கள் எமக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இவ்­வாறு மக்கள் பாதிக்­கப்­ப­டு­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதேபோல் கிளி­நொச்சி, தர்­ம­புரம், புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய வைத்­தி­ய­சா­லை­களில் மீதும் புது­மாத்­தளன் பகு­தியில் பாட­சா­லையில் தற்­கா­லி­க­மாக இயங்­கி­வந்த வைத்­தி­ய­சாலை மீதும் ஷெல் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று அநேக உயிர்கள் அங்கு பலி கொள்­ளப்­பட்­டது.

இறு­தி­யாக க.பொ.சாதா­ரண தர மற்றும் உயர்­தரப் பிரிவு மாண­வர்­களை தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அழைத்­துக்­கொண்டு போய் முத­லு­தவி பயிற்­சி­களை வழங்கிக் கொண்­டி­ருந்­த­போது அந்த மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யதில் அந்த மாண­வர்கள் இறந்­தார்கள். இந்த விடயம் தொடர்­பாக நாங்­களும் மக்­களும் பேசிக் கொள்­கின்ற விடயம் என்­பதைச் சுட்­டிக்­காட்­டு­கின்றோம்.

மருந்தும், உணவும் ஆயுதம் 
 இதே­வேளை மருந்­தையும் உண­வையும் இறுதி யுத்தம் இடம்­பெற்ற பகு­தியில் ஒரு ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­தி­னார்கள் என்ற விட­யத்­தையும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். குறிப்­பாக உண­வுகள் பற்­றாக்­கு­றை­யாகக் காணப்­பட்­டதால் மக்­க­ளுக்குச் சிறி­ய­ள­வி­லேயே கிடைத்­தது. மருந்துத் தட்­டுப்­பாடும் காணப்­பட்­டது.

இதே­வேளை இங்­கி­ருந்த வைத்­தி­யர்­களை அழைத்து அவர்­க­ளுக்குச் சொல்­லப்­பட்­ட­தற்கு அமைய அவர்கள் அப்­ப­கு­தியில் மருந்துத் தட்­டுப்­பாடு இருக்­க­வில்லை என்­பதை எழுதிக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் அங்கு மருந்துத் தட்­டுப்­பாடு இருந்­தது என்­பது உண்­மை­யாகும். இவை தொடர்­பாக விரி­வாக தூதுவர் ரெப்­விடம் எடுத்துக் கூறி­யுள்ளோம்.

இதே­வேளை மோதல் தவிப்பு வல­யங்­க­ளாக முன்னர் சுதந்­தி­ர­பு­ரத்தில் அமைக்­கப்­பட்ட வல­யத்­திற்குள் விடு­த­லைப்­பு­லிகள் இருக்­க­வில்லை. அவர்கள் அதற்கு பின்­னா­லேயே இருந்­துள்­ளனர். ஆனால் மோதல் தவிர்ப்பு வல­யத்தில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட மக்கள் அங்­கி­ருந்து மாத்­தளன் பகு­திக்கு சென்ற வேளையில் அம்­மக்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இவ்­வாறு அந்த மக்கள் இடம்­பெ­யர்ந்து போகின்ற வழி­யிலும் மக்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு பலர் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள்.

இதே­வேளை மாத்­தளன் பகு­தியில் மக்கள் சென்ற பின்னர் அங்கு மோதல் தவிர்ப்பு வல­ய­மாக அறி­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­திற்­குள்ளும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு அங்கும் பலர் கொல்­லப்­பட்­டார்கள். வலை­ஞர்­மடம், மாத்­தளன், புது­மாத்­தளன், முள்­ளி­வாய்க்கால் ஆகிய பகு­தி­களும் முன்னர் மோதல் தவிர்ப்பு வல­ய­மாக அறி­விக்­கப்­பட்ட சுதந்­தி­ர­புரம், உடை­யார்­கட்டு, வள்­ளி­புனம் ஆகிய பகு­தி­களும் சிறிய பகு­தி­க­ளா­கவே காணப்­பட்­டது. இந்த பகு­தி­க­ளுக்­குள்ளும் வெளி­யிலும் விடு­த­லைப்­பு­லி­களும் நின்று தாக்­கு­தல்­களை நடத்­தி­யதால் இரு­த­ரப்­பி­ன­ரு­டைய மோதல்­க­ளிலும் அநே­க­மான மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள்.

இவர்களால் உரு­வாக்­கப்­பட்ட மோதல் தவிர்ப்பு வல­யத்­திற்குள் விடு­லைப்­பு­லிகள் இருக்­கி­றார்கள் என்­ப­தற்­காக நம்­பிக்­கை­யுடன் இருந்த மக்கள் மீது தாக்­குதல் நடத்த முடி­யாது. அவர்கள் மக்­களை மனிதக் கேட­ய­மாக வைத்­தி­ருந்­தாலும் அந்த மக்கள் மீது தாக்­குதல் நடத்தி கொல்­லக்­கூ­டாது. அது ஒரு பிழை­யான காரி­ய­மாகும். இவை தொடர்­பா­கவும் விரி­வா­கவும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.

ஆலயங்கள் மீது தாக்குதல் 
 இவை­போன்று ஆல­யங்­களில் மக்கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­போது குண்­டுகள் போடப்­பட்டு மக்கள் கொல்­லப்­பட்­டனர். முக்­கி­ய­மாக நவாலி சென்.பீற்றர்ஸ் தேவா­லயம், குரு­நகர் புனித யாகப்பர் ஆலயம் ஆகி­ய­வற்றில் மக்கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­போது குண்­டுகள் போடப்­பட்டு மக்கள் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள்.

இதே­வேளை போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் அப்­ப­கு­தியில் இருந்து சர்­வ­தேச தன்­னார்வத் தொண்டு நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களை வெளி­யேற்­றி­யி­ருந்­தனர். இவர்கள் அங்­கி­ருந்து இவ்­வி­ட­யங்­களை அவ­தா­னிப்­பார்கள் என்­ப­தற்­காக அங்­கி­ருந்து அனுப்­பப்­பட்­டுள்­ளார்கள்.

சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம், ஐக்­கிய நாடுகள் சபை நிறு­வ­னங்கள் என்­ப­ன­வற்றை அங்­கி­ருந்து அவர்­களின் விருப்­ப­மின்றி அகற்­றி­யுள்­ளனர். போருக்குப் பின்­னரும் அவர்­க­ளு­டைய தேவைகள் இப்­ப­கு­தியில் காணப்­ப­டு­கின்ற போதிலும் அவர்கள் இன்­னமும் இங்­கு­வ­ர­வில்லை. அதற்கு அவர்­க­ளுக்கு அனு­ம­தியும் இல்லை. ஆதலால் மக்கள் மிகவும் பாதிப்­ப­டைந்­துள்­ளனர் என்­ப­தையும் தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.

இதேபோல் இங்கு நான் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் செம்­மணி என்ற இடத்தில் 500 பேர் வரை கொல்­லப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்­ளனர். இச்­சம்­பவம் நடை­பெற்று பல ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் நீதி­மன்­றத்தில் வழக்கு நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது நீதிவான் அப்­ப­கு­தியை தோண்டிப் பார்க்­கு­மாறு தெரி­வித்த பொழுது, அப்­ப­கு­தியை தோண்டிப் பார்த்த போது மூன்று, நான்கு பேரு­டைய தட­யங்கள் மட்­டுமே எடுக்க முடிந்­தது. அது தொடர்­பா­கவும் தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றினோம்.

அப்­ப­கு­தியில் புதைக்­கப்­பட்ட எலும்­புக்­கூ­டு­க­ளுக்கு என்ன நடந்­தது. அதேபோல் மாத்­தளன் பகு­தி­யிலும் இறுதி யுத்­தத்­தின்­போது கொல்­லப்­பட்­ட­வர்கள் புதைக்­கப்­பட்­டுள்­ளனர். அங்கும் என்ன நடந்­தது என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.

காணாமல் போனோர் விவகாரம் 
 சட்­டத்­திற்கு மாறாக கைது செய்­யப்­பட்டு காணா­மற்­போன நபர்கள் தொடர்­பாக முழு­மை­யாக விசா­ர­ணை­களை நடத்த வேண்டும் எனக் கோரி­யுள்ளோம். ஏனெனில் மனி­த­னு­டைய உயி­ருடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும். இதேபோல் போரால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வெளியே வந்த பிற்­பாடு அநா­தை­க­ளாக இருக்­கின்­ற­வர்­களில் வாழ்­வா­தார மேம்­பா­டு­க­ளுக்கு பாதிக்­கப்­பட்ட நிலையில் இருக்­கினர்.

உள்ளம் பாதிக்­கப்­பட்ட நிலையில் இருக்­கின்ற இவர்­க­ளுக்கு உள­வியல் ரீதி­யான புனர்­வாழ்வு அளித்­த­லுக்கு எந்­த­வொரு செயற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவ்­வாறு மக்கள் உள­வ­லு­வூட்டல் செயற்­பா­டு­களைப் பெறு­வ­தற்கு அவர்­க­ளுக்கு உரிமை இருக்­கின்­றது. ஆனால் அதுவும் இன்­னமும் இப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

மக்கள் தொகையில் வித்தியாசம் 
 இதே­வேளை முள்­ளி­வாய்க்­காலில் கடந்த 2008ஆம் ஆண்டு ஐப்­பசி மாதத்­திற்குப் பின்­னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்­திற்கு முன்­ன­ரு­மான எட்டு மாதக் காலப்­ப­கு­தியில் வசித்­த­வர்­களில் சனத்­தொகைப் புள்­ளி­வி­பரம் தொடர்­பா­கவும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் அக்­கா­லப்­ப­கு­தியில் வசித்­த­வர்­களின் விப­ரங்கள் தொடர்­பா­கவும் மாவட்ட அர­சாங்க அதி­பர்கள் விரி­வான அறிக்­கை­களை கையொப்­ப­மிட்டு சமர்ப்­பித்­துள்­ளனர்.

இந்த மக்கள் இறு­தி­யுத்­தத்தின் போது வவு­னியாப் பகு­திக்கு இடம்­பெ­யர்ந்து சென்­றுள்­ளனர். ஆனால் இந்த மக்கள் தொகைக்­கி­டையில் பெரி­ய­தொரு வித்­தி­யாசம் காணப்­ப­டு­கின்­றது. இதற்­க­மைய ஒரு இலட்­சத்து 46 ஆயி­ரத்து 679 மக்கள் காணா­மற்­போ­யுள்­ளனர். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­ய­வில்லை. இது தொடர்­பான தக­வலை யாருமே தெரி­விப்­ப­தற்குத் தயா­ராக இல்லை. இவ்­வி­டயம் தொடர்­பாக நான் எனது ஆவ­ணங்­க­ளுக்கு அமைய பல­ரிடம் கோரி­ய­போதும் யாருமே எதையும் சொல்­ல­வில்லை. ஆனால் என்­னிடம் புல­னாய்­வா­ளர்கள் மட்டும் வந்து விசா­ரணை செய்­து­விட்டு சென்­றுள்­ளனர்.

காணி அபகரிப்பு 
 காணி அப­க­ரிப்பு எமது இனத்தை இல்­லாமல் அழிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக விரி­வாக எடுத்துக் கூறி­யுள்ளோம். அரசின் உத­வி­யுடன் இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றங்கள் அதா­வது தமிழ் அர­சி­யலை ஒரு தளம்பல் நிலைக்குக் கொண்டு செல்­வ­தற்­கான அரசின் ஆத­ர­வுடன் இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றங்­களை நிறுத்­து­மாறு 56ஆம் ஆண்டு காலத்­தி­லி­ருந்து சொல்லிக் கொண்டு வரு­கின்றோம். இதனை நிறுத்­து­மாறும் அர­சாங்­கத்­திடம் கோரி வரு­கின்றோம்.
இதே­வேளை மொழியை வலு­வி­ழக்கச் செய்யும் நோக்­குடன் செய்­யப்­ப­டு­கின்ற திட்­டங்கள், பெளத்த மதம் சார்­பி­லான பிர­சார நட­வ­டிக்­கைகள், விகாரை அமைத்தல் போன்ற விட­யங்கள் தொடர்­பா­கவும் தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூறியுள்ளோம்.

வடக்கில் உள்ள இரா­ணு­வத்தின் தொகை தொடர்­பா­கவும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். வடக்கில் யுத்தம் முடி­வ­டைந்­துள்­ளது. நாம் ஒரு சாதா­ரண வாழ்க்­கைக்கு தயார்ப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றோம். எனவே எமக்கு ஒரு சிவில் நிர்­வாகம் வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இதே­வேளை இரா­ணு­வத்தின் பிர­சன்னம் இப்­ப­கு­தியில் அதி­க­ரித்­துள்­ளதால் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்குக் கூட எமக்கு அனு­ம­தி­யில்லை என்ற விட­யத்­தையும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.

எனவே இத்­த­கைய சூழல் இப்­ப­கு­தியில் நடை­பெ­று­வ­தா­கவும் இதனை மாற்றி நல்­ல­தொரு சூழல் ஏற்­படும் வகையில் அன்று தென்­னா­பி­ரிக்­காவில் இடம்­பெற்ற உண்­மையும் நேர்­மை­யு­மான நல்­லி­ணக்­க­மான ஒரு நிலை­மையை உரு­வாக்கி சுமு­க­மான ஒரு நிலையை உரு­வாக்க முடியும். அதற்­கொரு சூழலை இப்­ப­கு­தியில் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்ளோம்.

போர்க்குற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் 
 இங்கு ஒரு போர்க்­குற்றம் நடை­பெற்­றது என்­பதை வெளிக்­கொண்டு வரு­வ­தற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். இதனை இந்த நாட்டினுடைய நன்மைக்காகவும் இந்த மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்குடன் கோரியுள்ளோம். தனிப்பட்ட நபர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இதனை நாம் கோரவில்லை என்றார்.

ஆளுநர், முதலமைச்சருடனும் சந்திப்பு 
 இதேவேளை சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைக் கையாளுகின்ற அமெரிக்காவின் விசேட தூதுவரான ஸ் ரீபன் ரெப் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர் உதயன் பத்திரிகையின் அலு வலகத்திற்கும் சென்று வடக்கின் தற் போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்­துள்ளார். குறித்த பத்­தி­ரிகை நிலை­யத்­திற்குச் சென்ற ரெப் அப்­பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரி­ய­ரான கான­ம­யில்­நாதன் மற்றும் அப்­பத்­தி­ரி­கையின் முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஈ.சர­வ­ண­பவன் ஆகி­யோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்­திப்பின் போது வடக்கில் தற்­பொ­ழுது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஊட­கங்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகள் தொடர்­பாக தூது­வ­ருக்கு எடுத்துக் கூறப்­பட்­டுள்­ள­துடன் போர்க்­குற்­றங்கள் மற்றும் தற்­போ­தைய மக்­களின் நிலை தொடர்­பான அறிக்­கை­க­ளையும் குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தூதுவரிடம் கையளித்துள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies