இலங்கை கடற்படைக்கு பயிற்சி: டெல்லி மேல்சபையில் கனிமொழி எதிர்ப்பு
12 Dec,2013
இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித்தும், இந்திய மீனவர்கள், இலங்கையால் சிறைப் பிடிக்கப்படுவது குறித்தும், டெல்லி மேல்சபையில் விவாதிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், சபா நாயகர் இதற்கு நேரம் ஒதுக்க மறுத்ததால், கனிமொழி தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.
இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி, கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பது நிறுத்தப் படவில்லை. இதே போல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்த மீனவர்களை விடுவிக்கவும், மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இது குறித்து விவாதிக்க வேண்டுமென்று, கனிமொழி எழுப்பிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதையொட்டி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள், அவையில் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.