நாடுகடந்த அரசு மாநாட்டில் டேனிஸ் அரசியல் தலைவர்
05 Dec,2013

நா. க. த. அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் சிறப்பு அழைப்பாளராக டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது. வரும் டிச 6-7-8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது.
அந்த அமர்வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் விஸ்வநாதன் அவர்களின் அழைப்பை ஏற்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வின் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக டென்மார்க் சமூக சனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடளுமன்றில் குழந்தைகள் மற்றும் கல்விகளுக்கான பேச்சாளரும் வெளிநாட்டவர்கள், இணைவாக்கத்திற்கான நாடளுமன்ற குழுத்தலைவருமான திரு. ட்றோல்ஸ் றாவுன் [Troels Ravn] அவர்கள் இன்று காலை நியூயார்க் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தவல்கள் தெரிவிக்கின்றன.