கண்டனம் தெரிவிக்க வேண்டிய மத்திய அரசு கோத்தபாயவுடன் உறவாடுவதா?!- கருணாநிதி கேள்வி
05 Dec,2013
தமிழக மீனவர்களை கைது செய்துவரும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய மத்திய அரசு, ராஜபக்சவின் தம்பியுடன் கைகுலுக்கி உறவாடுவதா? என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கை எப்போதுதான் முடியும்?
பதில்:- எத்தனை வேண்டுகோள்கள், எத்தனை கடிதங்கள், எத்தனை அறிக்கைகள் விடுத்த போதிலும் இந்த கொடுமை நீங்கவில்லை.
இதுபற்றி பிரான்ஸ் கூட வருந்துகிறது, நம்முடைய மீனவர்களின் நிலைக்காக, தமிழர்களின் நிலைக்காக உலகம் முழுவதும் மனித நேயம் கொண்ட அனைவரும் வருந்துகிறார்கள்.
ஆனால் இத்தகைய நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்திட வேண்டிய இந்திய அரசோ, ராஜபக்சவின் தம்பியை இரகசியமாக அழைத்து கை குலுக்கி உறவாடி உவகையை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் விலங்கிடப்படுகின்றனர்!- கோத்தபாயவை இந்தியா இரகசியமாக உபசரிக்கிறது - கருணாநிதி
தமிழக மீனவர்கள் இலங்கையின் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் போது மத்திய அரசாங்கம் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரை இரகசியமாக அழைத்து உபசரிப்பதாக முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்
கைதுசெய்யப்படும் தமிழக மீனவர்கள் மனித நாகரீகத்துடன் நடத்தப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது
எனினும் அண்மையில் வெளியான ஒரு புகைப்படத்தில் இலங்கையின் நீதிமன்றம் ஒன்றுக்கு தமிழக மீனவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்படும் காட்சி வெளியாகியிருந்தது
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள கருணாநிதி, இது நாகரீகமற்ற செயல் என்று குறிப்பிட்டு;ள்ளார்
எனினும் மத்திய அரசாங்கம் இதனை கருத்திற்கொள்ளாமை வருந்தத்த்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.