இந்தியாவுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தும் என்கிறார் இரா.சம்பந்தன் பா.உ.
02 Dec,2013
போர்க்குற்ற விசாரணை, 13வது திருத்தம், வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு மற்றும் இந்தியப் பிரதமரின் வடக்கு வருகை தொடர்பில் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவுடன் இது தொடர்பில் விரைவில் பேச்சு நடத்தத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் சிதம்பரம் தெளிவாகக் கூறியுள்ள நிலையிலேயே இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இனப்படுகொலைகள் நடந்தேறின என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அவை குறித்து சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன், 13வது திருத்தத்தையும், ஈழத் தமிழர்களையும் இந்திய மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது.
ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் யாழ்ப்பாணம் சென்று வடமாகாண முதலமைச்சருடன் பேச்சு நடத்துவார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற "இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசின் இந்தக் கருத்துகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்ததாவது
இப்போதைக்கு இது தொடர்பில் வெளிப்படையாகக் கருத்துக்கள் எதனையும் கூற விரும்பவில்லை. எனினும், இலங்கை தொடர்பிலும், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பிலும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் சிதம்பரம் தெளிவாகக் கூறியுள்ளார்.
இதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். இது தொடர்பில் இந்திய மத்திய அரசுடன் விரைவில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்றார்.
ம், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பிலும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் சிதம்பரம் தெளிவாகக் கூறியுள்ளார்.
இதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். இது தொடர்பில் இந்திய மத்திய அரசுடன் விரைவில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்றார்.