பறந்தது புலிக்கொடி – நினைவுகூருவதை எவராலும் தடுக்க முடியாது

25 Nov,2013
 


பறந்தது புலிக்கொடி – திணறுகின்றது படைத்தரப்பு0நினைவுகூருவதை எவராலும் தடுக்க முடியாது
 

தமிழீழ விடுதலைப் புலிகளும், மக்களும் வருடாவருடம் அனுஸ்டிக்கும் மாவீரர் தினம், எதிர் வரும் 27 ஆம் திகதியும் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கும் முனைப்புக்கள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்றது

இந்த நிலையில் மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் (கோபுரம்) ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியான ‘புலிக்கொடி’ ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தகவலறிந்த படைத்தரப்பினர் இன்று திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துரையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றியுள்ளனர்.

தற்போது மேலதிக விசாரனைகளை படைத்தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். எனினும்; இராணு புலனாய்வுத்துரையினர் குறித்த சம்பவத்தை முடிமறைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு,

இச்சம்பவத்தை; மறுத்துள்ள மன்னார் காவல் துறையினர் அவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

 


மாவீரர்களை நினைவுகூருவதை எவராலும் தடுக்க முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

 

எமது உரிமைக்காகப் போராடி மரணித்த மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம் முயல்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?

தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது.

இந்த நிலையில், அன்றைய நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

மாவீரர் அஞ்சலி மரபார்ந்த நிகழ்வு – மாவை சேனாதிராசா

இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் மக்கள் தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும், இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது முக்கியமானதாக விளங்குகின்றது.

எனவே, தமிழர்கள் தமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி, அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.

அவர்கள் வீடுகளில் கூட மரணித்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள். இது அன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும்.

இந்த நிலையில், மாவீரர் நாளான நவம்பர் 27ம் திகதியை பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவமும், பொலிஸாரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இவ்வாறான தடை உத்தரவுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

மாவீரர்களுக்கு பயங்கரவாத முத்திரையா? – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூருவதை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பெரும் மனித உரிமை மீறலாகும்.

இலங்கையில் “மாவீரர்’ என்ற பதம் அரசுக்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக உள்ளது.

தாயக மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்துப் போராடி உயிர்நீத்த அந்த உத்தம தியாகிகளுக்கு தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இறந்தவர்கள் விடயத்திலும் அடக்கு முறையை இலங்கை அரசு பிரயோகித்து வருகின்றது. எனினும், தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு வருடாவருடம் ஏதோ ஒரு வழியில் விளக்கேற்றி, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த தமது உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.

நாடாளுமன்றத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலித்ததை மறந்துவிட்டார்களா பா.அரியநேத்திரன்

மாவீரர்கள் இலங்கையில்தான் பிறந்தவர்கள். அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் எம்மைப் போல தமிழ்த் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்கள்.

தமிழருக்கான உரிமை சிங்கள அரசால் மறுக்கப்பட்டதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தார்கள். மாவீரர்களின் இந்தத் தியாகத்தினால்தான் அவர்களை நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றோம்.

கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற வளாகத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை ஆட்சியில் உள்ளவர்கள் மறக்கமாட்டார்கள். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதையடுத்து இவ்வாறான அஞ்சலி நிகழ்வுக்கு அரசு தடைவிதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.

தமிழர்கள், இறந்தவர்களை நினைவு கூருவதற்குக்கூட தடைவிதித்தால் நாட்டில் இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இருக்காது என்பதை அரசும், அதன் படைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதையும் மீறி தடை விதித்தாலும் தமிழர்கள் தமது மனங்களில், தமது வீடுகளில் மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது” என்றார்.

 

 

மாவீரர்களிற்கு முதல் அக வணக்கம் கரவெட்டிபிரதேசசபையில்..

 

படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா உள்ளிட்ட அனைத்து மாவீரர்களிற்கும் கரவெட்டி பிரதேசசபை அஞ்சலியை செலுத்தி மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருக்கிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கரவெட்டிப்பிரதேச சபையில் பிரதேசச பை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சகிதம் இன்று மாவீரர்களிற்கு மலரஞ்சலி செலுத்தியும் சுடரேற்றியும் மௌன வணக்கம் செலுத்தியும் அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

வட-கிழக்கெங்;கும் மாவீரர் தினத்தை முன்னிட்டு கண்களுள் எண்ணெய் விட்டவாறு இராணுவமும் அதன் புலனாய்வுத்துறையும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் தமிழ் தரப்புக்களோ கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தவறவிடாது நினைவு கூரல்களை நடத்தியே வருகின்றன.

அவ்வகையில் இன்றைய தினம் உலக மகளிர் வன்முறை எதிர்ப்பு தினமாகும். அதனை அனுஸ்டிக்கப் போவதாக கரவெட்டி பிரதேச சபை அறிவித்திருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியானதுடன் முன்னதாக முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா உள்ளிட்ட அனைத்து மாவீரர்களிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னரே அனைத்து நிகழ்வுகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இதனிடையே வட மாகாணசபை கூட்டமைப்பு வசம் உள்ள நிலையில் இம்முறை அரச திணைக்களங்களினில் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் இடமபெறலாமென்ற அச்சம் படைத்தரப்பிடையே உலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

59வது அகவை காணும் தலைவன்ஸ.!


தமிழர் நாம் இத்தரணியில்

தலை நிமிர்ந்து வாழ
 தன் உயிரை துச்சமென எண்ணி
 தாய் மண்ணைக் காக்க வந்த
 தலைமகனே வீரத்தமிழனேஸ!

சோதனைகளை சாதனையாக்கி
 காவிய நாயகனாய்
 சரித்திரம் படைக்க
 மறவர் வழியில் வந்த
 மாபெரும் மாவீரனேஸ.!

நாம் இழந்த பொருள்களும்
 சிந்திய இரத்தங்களையும்
 பிரிந்த உயிர்களையும்
 நாளைய விடியலுக்கு
 அர்ப்பணம் செய்து
 சுட்டெரிக்கும் சூரியனைபோல்
 கயவர்களை சுட்டெரித்து
 சுடர் கொழுந்தாய்
 தமிழன் தமிழனாய் வாழ
 வீறு கொண்ட வேங்கையாக எழுந்து
 புது அவதாரத்தோடு
 எழுந்து வா வீரனே ஸ.!

உலகம் வியந்து பார்க்கும்
 வரலாறு கண்ட
 வரலாற்று நாயகனே
 அகவை ஐம்பத்தொன்பதனில்
 புத்தம் புதுபொலிவோடு
 புறப்படு தலைவா உன் வருகைக்காய்
 காத்திருக்கும் தமிழினம்ஸ!Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies