சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னெடுத்துள்ள பாரிய திட்டம்!
16 Jan,2026
ஏர்லைன்ஸ் மற்றும் கொழும்பு கங்காராம விகாரை இணைந்து ஆரம்பிக்கவுள்ளன.
உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் மத மற்றும் கலாச்சார விழாவான கொழும்பு நவம் மகா பெரஹெரா சர்வதேச கலாச்சார விழாவாகவும், கொழும்பு நகரத்தை சுற்றுலா மற்றும் கலாச்சார தலமாகவும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஏர்பஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் A320neo விமானம், இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தையும் பெரஹெராவின் சிறப்பையும் வெளிப்படுத்தும் ஒரு தூதராக செயற்படும்.
அலங்கரிக்கப்பட்ட இந்த விமானத்தின் மூலம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் சர்வதேச இணைப்புகள் முழுவதும் நவம் மகா பெரஹெராவின் புகழ், மகிமை மற்றும் கலாச்சார அடையாளத்தை கொண்டு செல்லும் எனவும், இந்த முயற்சி நவம் மகா பெரஹெராவை ஒரு புனிதமான பௌத்த ஊர்வலமாக மட்டுமல்லாமல், கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாகவும் நாட்டை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்காராம விகாரையால் ஏற்பாடு செய்யப்படும் நவம் மகா பெரஹெரா, அதன் வரலாற்று முக்கியத்துவம், மத மற்றும் கலாச்சார மகத்துவத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் நிறுவன கட்டமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஆதரவை வழங்கியுள்ளது.
ஏர்பஸ் A320neo விமானம், நகரத்திலிருந்து நகரத்திற்கு, கலாச்சாரத்திலிருந்து கலாச்சாரத்திற்குப் பறந்து, கங்காராம விகாரை மற்றும் நவம் மகா பெரஹெராவின் செய்திகளை உலகிற்கு எடுத்துச் செல்வதாகவும், இதன் மூலம் இலங்கையின் நீண்டகால கலாச்சார விழுமியங்களை உலகிற்குக் கொண்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது இலங்கையை சர்வதேச அளவில் மேம்படுத்துவதோடு, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமையின் இடமாக நாட்டின் பிம்பத்தை வலுப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது