மலையக தமிழ் மக்களை வடக்கில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் - சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன்
11 Dec,2025
மலையக தமிழ் மக்களை இனியும் அநாதரவான வாழ்கை வாழக்கூடாது வடக்கு கிழக்கில் வாழ விரும்பும் மக்களை நாங்கள் வரவேற்க வேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
ஆறுமுகநாவலரின் குருபூஜை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் புதன் கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மலயகத்தில் வாழும் தமிழ் மக்கள் படும் துன்பம் எல்லையற்றது
பிரித்தானியர்களால் தங்கள் தேவைக்கக கொண்டுவரப்பட்ட மக்கள் சொல்லொண்ணாதுயரத்தில் வாழுகின்றார்கள். நிரந்தர நிலமில்லை,வீடும் இல்லை இருப்பிடவசதியற்று அச்சதுடன் வாழ்ந்துவருகிறார்கள்.
இயற்கை சிற்ரத்தினால் தற்போது தொடர்ந்து அவலத்தை சந்தித்துள்ளார்கள். மலையின் விழிம்பில் மிண்டும் மக்கள் அந்தர நிலயில் வசிப்பதை விட வடக்கு கிழக்கில் வந்து வசிப்பது இலகுவானது மலயகத்தில் இருக்கும் மக்கள் வடக்கில் வாழவிரும்புவார்களானால் நாங்கள் நிலம் தருகிறோம்.
நீங்கள் வடக்கில் வந்து குடியேறுங்கள், வடக்கில் எவ்வளோ பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கில் எவ்வளவோ நிலம் இருக்கு என்று அவர்களை நாங்கள் இங்கு வாழவைக்க வேண்டும் இதுவே மனித நேயம், இதுவே தர்மமாகும்.
மலையகத்திலிருந்து மக்கள் யாராவது வடக்கில் குடியேற விருப்பத்துடன் வந்தால் அவர்களை வரவேற்க வேண்டும். இங்குள்ள எல்லா சிதம்பரத்து காணிகளிலும், கோயில் காணிகளிலும் எல்லா தர்ம காணிகளிலும் அவர்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு எங்களை நாம் தயாராக்க வேண்டும். இதற்கு எம்மை போன்றவர்கள் பூரண ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கின்றோம். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பு வரும் என்றார்.