ஹாட்லிக் கல்லூரி தமிழ் ஆசிரியை இரு பிள்ளைகளின் தாய் பலி; பொலிஸார் விசாரணை!
11 Dec,2025
யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் விவரம்:
பெயர்: நிஷாந்தினி நித்திலவர்ணன்
வயது: 43
பகுதி: வடமராட்சி
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது படுகாயமடைந்த ஆசிரியை முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நேற்று) உயிரிழந்துள்ளார்.
விசாரணை:
சம்பவம் குறித்து பருத்தித்துறைக் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
உயிரிழந்தவர் யாழ். ஹாட்லிக் கல்லூரியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.