கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு, 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர்
02 Dec,2025
நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம்
குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27ம் திகதி மண்சரிவு மற்றும் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் குறித்த தோட்டத்தை சேர்ந்த 65குடும்பங்களை சேர்ந்த 250பர் பாதிக்கபட்டு தற்காலிகமாக உடஹேன்தென்ன கிறேஹெட் இல 01 தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர் லயன் குடியிருப்பை சேர்ந்த 13வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது கற்பறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08பேர் சடலமாக மீற்கப்பட்தாகவும் இன்றைய தினமும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் 05 பேர் கானாமல் போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கபாபட்டு வருவதாக குருந்துவத்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட ஏழு பேரின் சடலங்களும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .இந்த விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் மண்ணில் புதையுண்ட சடலங்களை மீட்பதற்கு இரானுவத்தினரோ பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கபாபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.