கொழும்பை வந்தடைந்துள்ள இந்திய விமானப்படையின் மற்றொரு விமானம்..
30 Nov,2025
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் கொழும்பை வந்தடைந்துள்ளது.
இந்த விமானத்தில் சுமார் 10 டன் எடையுள்ள அனர்த்த நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடந்து வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இந்த மருத்துவக் குழு நேரடிப் பயிற்சி மற்றும் ஆதரவை வழங்கும்.
இந்தியா, 'ஒபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) என்ற பெயரில் இலங்கையின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், தனது உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.