U.K இல் நாடுகடத்தல் அபாயத்தில் இலங்கையர்கள்...
21 Nov,2025
ஆரம்பம் முதல் தானே திட்டமிட்ட நுகேகொட பேரணியை இறுதிநேரத்தில் ராஜபச்சகள் கச்சிதமாக ஹைஜாக் செய்து தமது அரசியல் வாரிசான நாமலை 2.0 நாமலாக்க முனைந்ததால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தனது மனைவி மைத்திரி சகிதம் ரணில் இந்தியாவுக்கு பறந்தார்.
இதேபோலவே ராஜபக்சக்கள் நுகேகொடையில் ஒன்று கூட முன்னர் அந்த இடத்துக்கு செல்லும் வீதிகளில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படும் புல் கட்டுகள் ஆங்காங்கே இரவோடி இரவாக ஜேவிபிக்காரர்களால் தொங்கவிடப்பட்ட காட்சிகளும் பளிச்சிட்டன.
இதேசமகாலத்தில் இந்தவாரம் பரித்தானியாவில் நின்ற சிறிலங்கா சீஐடியினர் நாமலின் லண்டன் கல்வி தொடர்பான சில இரகசியங்களையும் துருவி எடுத்துள்ளனர்.
லண்டன் நகரத்திக் சிற்றியுனிவெர்சிற்றி பல்கலைகழகத்தில் நாமல் மக்களின் பணத்தில் சாட்டுக்கு கல்விகற்கவைப்படட விடயங்களும் நாமல் பிரித்தானியாவில் கல்வி கற்றகாலத்தில்; லண்டனை தளமாகக் கொண்ட தமிழ் முதலாளி ஒருவர் அவருக்குரிய தங்குமிட ஏற்பாடுகளை கணக்கில் வராத வகையில் செய்மைக்குரிய புதிய ஆதாரங்களை இந்த சீஐடி குழு பிடித்துள்ளதாக தெரிகிறது.
இந்த பின்னணியில் திருமலை புத்தர் சிலை அடாவடி போன்ற சில பௌத்தவாத முன்னோட்ட நகர்வுகளுடன் இன்று அரச எதிர்ப்பு பேரணி போர்வையில் நாமலுக்கு பரிவட்டம் கட்ட மகிந்தவும் நின்றார்.
இதேசமகாலத்தில்> பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பலர் முறைகேடாக கல்வி விசா மற்றும் பாராமரிபபு தொழிற்துறை விசாக்களை பெற்று நுழைந்தமை கண்டுபிடித்துள்ளதையடுத்து விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.
போலியான தகுதிகள் மோசடியாக வழங்கப்பட்ட தொழில் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர் என்ற போர்வையில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த இந்த மோசடியின் அளவு அதிர்ச்சிகரமானதென பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துளளனர்.